கடலூர் சுப்ரீம் லயன்ஸ் சங்கம் சார்பில் நடைபெற்ற குழந்தைகள் தின விழா மற்றும் தேசிய ஊடக தின விழா!
கடலூர், நவ.17-
கடலூர் மாவட்டம், கடலூர் சுப்ரீம் லயன்ஸ் சங்கம் சார்பாக, நேற்று (16.11.2026) காலை 11:45 மணிக்கு குழந்தைகள் தின விழா மற்றும் தேசிய ஊடக தின விழா முன்னிட்டு கடலூர், திருப்பாதிரிப்புலியூர், தானம் நகரில் உள்ள அரசு ஆதிதிராவிட தொடக்கப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகங்கள், பேனா, பிஸ்கட், இனிப்பு வகைகள் வழங்கி குழந்தைகள் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
மேலும், நடைபெற்ற தேசிய ஊடக தின விழாவில் ஊடகப்பிரிவு தின செய்தி சமுத்திர நிறுவனர் மற்றும் ஆசிரியர் டாக்டர். தி.இ.ராஜமச்சேந்திரசோழன் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டது. மூத்த அரிமா சங்க தலைவர் Ln.திருமலை, முன்னிலையில், முன்னாள் தலைவர் Ln.மால் முருகன் தலைமையில், பாடகர் Ln. N.பாலசுப்பிரமணியன் வாழ்த்துரை வழங்கினார். சங்க பொருளாளர் Ln. எஸ். முருகன் விழாவின் முடிவில் நன்றிகளை கூறினார்.
மற்றும், பக்கிரிசாமி, பாலாஜி, பள்ளி தலைமை ஆசிரியர் A.லட்சுமி பிரபா, ரா.ஷாலினி பிரியா, ஜெ. ஜெயப்பிரியா, ஆசிரியர்கள் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பள்ளி மாணவ மாணவிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பெரும் மகிழ்ச்சியுடன் சென்றனர்.