தமிழ்நாட்டிலேயே சிறந்த மாவட்டமாக கல்வியில் தூத்துக்குடி விளங்குகிறது மாணவ மாணவிகளுக்கு மதிவண்டி வழங்கி அமைச்சா் கீதாஜீவன் பேசினாா்.
தூத்துக்குடி தமிழ்நாடு அரசின் சார்பில் சாமுவேல்புரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு முதல் கட்டமாக 88 பேருக்கு விலையில்லா மிதிவண்டிகளை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் வழங்கி பேசுகையில் தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சியில் மாணவர்களாகிய உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. தமிழ்நாடு கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிக முயற்சி எடுத்து கல்வியும். மருத்துவமும் எனது இரு கண்கள் என முதலமைச்சர் கூறி வருகிறார். எத்தனையோ மாணவியர்களுக்கு கிடைக்காத வாய்ப்பு உங்களுக்கு கிடைத்திருக்கிறது. முன்பு 8 ம் வகுப்பு அல்லது 10 ம் வகுப்பிலேயே மாணவியர்களின் பள்ளிப்படிப்பை நிறுத்தும் நிலையை மாற்றி, பெண் குழந்தைகள் கல்லூரி வரை படிக்க வேண்டும். அவர்களுக்கு உயர்கல்வி மிக அவசியம் என்பதில் அதிக முயற்சி எடுத்து வருகிறார்கள். உயர்கல்வி படிக்கின்ற மாணவியர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். எதிர்கால தலைவர்களான மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்கி, தகுதி வாய்ந்தவர்களாக உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில் நான் முதல்வன் திட்டத்தை அறிமுகப்படுத்தி, அதன்மூலம் திறன்மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. 12ம் வகுப்பு முடித்த பிறகு, என்னென்ன வாய்ப்புகள் இருக்கிறது? எதை தேர்வு செய்யலாம்? மாணவர்களுக்கு ஏற்ற கல்லூரி எங்கு இருக்கிறது? என்பது குறித்து இத்திட்டத்தின் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. "உயர்வுக்கு படி திட்டத்தில்" தமிழ்நாட்டிலேயே சிறந்த மாவட்டமாக தூத்துக்குடி விளங்குகிறது. பெற்றோர்கள் நோக்கம் நம்முடைய பிள்ளைகள் உயர்ந்த நிலையில் இருக்க வேண்டும் என்பதே. மாணவர்கள் மார்க் அடிப்படையில் படிக்காமல் சிறந்த அறிவாளியாக சிந்தனையாளர்களாக உயர்வதற்கு படிக்க வேண்டும். நல்ல ஊட்டச்சத்து உணவுகளை சாப்பிட வேண்டும். துரித உணவு, எண்ணெய் பலகாரங்களை மாணவர்கள் தவிர்க்க வேண்டும். சைக்கிள் ஓட்டுவது மாணவ மாணவிகளுக்கு தன்னம்பிக்கையும் நல்ல உடல் ஆரோக்கியத்தை தரும் மாணவிகள் அனைவரும் சைக்கிள் ஓட்ட கற்றுக் கொள்ள வேண்டும். நான் 12ம் வகுப்பு வரை தமிழ்வழியில் உள்ளூரில் தான் படித்தேன். எங்கு படித்தாலும் நமது திறமைகளை உருவாக்கிக் கொண்டு எங்கேயும் சாதித்து வெற்றியடைய முடியும். குறிப்பாக பெண் குழந்தைகள் இளம் பருவத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் வழிகாட்டுதலின்படி நல்ல வழியை தேர்ந்தெடுத்து நீங்கள் பயணிக்கும் போது நல்ல எதிர்காலம் உங்கள் அனைவருக்கும் அமையும். சமூக ஊடகங்கள் மற்றும் கைபேசிகளை படிப்பு தேவைக்கு மட்டுமே பயன்படுத்துங்கள். இவைகளின் மூலம் உங்களின் பொன்னான நேரத்தை வீணாக்கி விடாதீர்கள் என்பது என் அன்பான வேண்டுகோள் என அமைச்சர் கீதாஜீவன் பேசினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சங்கீதா சின்னராணி, கிழக்கு மண்டல உதவி ஆணையர் வெங்கட் ராமன், பள்ளி தலைமையாசிரியர் ரூபினா ரொட்ரிகோ, உதவி தலைமையாசிரியர் கிரேஸ் ஹெப்சி பாய். கவுன்சிலா் மெட்டில்டா, திமுக பகுதி செயலாளர் ஜெயக்குமார், வட்ட பிரதிநிதி கலை, முன்னாள் கவுன்சிலர் பிச்சையா, முன்னாள் அறங்காவலா் குழு தலைவர்செந்தில்குமாா், மற்றும் மணி அல்பட் ஆசிாியா்கள் மாணவ மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனா்.
Comments
Post a Comment