குமராட்சியில் வர்த்தக சங்கம் சார்பில் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம்!

குமராட்சியில் வர்த்தக சங்கம் சார்பில் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம்!
காட்டுமன்னார்கோவில், ஜுன், 02-
கடலூர் மாவட்டம்,  காட்டுமன்னார்கோவில் வட்டம்,  குமராட்சி வர்த்தக சங்கம் சார்பில்  மறைந்த வர்த்தக சங்க கௌரவ தலைவர்  சக்கரவர்த்தி அவர்களின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு  இலவச கண் சிகிச்சை முகாம் பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர்கள் தினேஷ்,  ராணா, ராகேஷ்  ஒருங்கிணைப்பாளர் திருவேங்கடம்  மற்றும் செவிலியர்கள்  தலைமையில் நடைபெற்றது.
         நிகழ்ச்சியில் கண் மருத்துவர்  இளையராஜா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சினை   துவங்கி வைத்தார். 
       நிகழ்ச்சிக்கு குமராட்சி வர்த்தக சங்கத் தலைவர் கே.ஆர்.ஜி. தமிழ்வாணன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் செயலாளர் மணிவண்ணன், ஒருங்கிணைப்பாளர் அப்துல்பாசித் மற்றும் சங்க நிர்வாகிகள் குமரவடிவு, துரைசிங்கம், பிரதீப், அப்துல்ரவுப், பார்த்தசாரதி, மணிகண்டன், செந்தில்குமார்,  முஸ்தபா, பிரதீப், குட்டிமணி, பாலாஜி,  ஜானகிராமன் ஆகியோர் கலந்து கொண்டனர். 
       மேலும் இந்த முகாமில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கலந்து கொண்ட 500 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன்பெற்றனர். இதில் இலவச கண் அறுவை சிகிச்சைக்கு சுமார் 100 க்கும் மேற்பட்டோர் பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு பேருந்து மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.