உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு தென்கடப்பந்தாங்கல் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம்...

உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு தென்கடப்பந்தாங்கல்   ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம்.


இராணிப்பேட்டை, பிப்.04-
இராணிப்பேட்டை மாவட்டம்,
வாலாஜா ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தென் கடப்பந்தாங்கல்     ஊராட்சியில் உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு கிராம சபைக் கூட்டம் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே நடைபெற்றது.

    இக்கூட்டத்திற்கு தனி அலுவலர் மற்றும் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மண்டலம் 4 சண்முகம்  தலைமை தாங்கினார். ஒன்றிய உதவி பொறியாளர் ஏகநாதன்  முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலாளர் சங்கர்  மேற்பார்வையில் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதிச் செலவினங்கள், தணிக்கை அறிக்கை, மழைநீர் சேகரிப்பு, டெங்கு காய்ச்சல் தடுப்பு, வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், வெற்றி திட்டம், குழந்தைத் தொழிலாளர் தடுப்பு, பல்லுயிர் மேலாண்மைக் குழு அமைத்தல், சாதிப் பெயர் மாற்றம், வளர்ப்பு விலங்குகள் மற்றும் தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்துதல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. மேலும், கிராமத்தின் அடிப்படை வசதிகளான குடிநீர், சுகாதாரம், சாலை வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் கிராம வளர்ச்சிப் பணிகளை விரைவுபடுத்துதல் தொடர்பாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்தில் அரசு அலுவலர்கள், மகளிர் சுயஉதவிக் குழுவினர், கிராமக் கல்விக் குழுவினர், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர்  கலந்து கொண்டனர்.