புதுச்சேரியில் பகவான் பிர்சா முண்டா அவர்களின்151வது பிறந்தநாள் புகழ் அஞ்சலி விழா!

புதுச்சேரியில் பகவான் பிர்சா முண்டா அவர்களின்151வது பிறந்தநாள் புகழ் அஞ்சலி விழா!

   புதுச்சேரி, நவ.17-
புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சியின் சார்பில், சுதந்திரப் போராட்ட வீரரும், பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காகப் போராடிய மாபெரும் தலைவருமான பகவான் பிர்சா முண்டா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, மாநிலத் தலைவர் V.P. ராமலிங்கம்  தலைமையில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி புகழஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் தலைமை உரையாற்றிய மாநிலத் தலைவர் V.P. ராமலிங்கம், பகவான் பிர்சா முண்டா அவர்கள் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக நடத்திய வீரமிகு போராட்டங்கள், நாட்டின் விடுதலைக்காக அவர் செய்த தியாகங்கள் மற்றும் பழங்குடியின மக்களின் உரிமைகள், சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக அவர் மேற்கொண்ட சீர்திருத்தங்கள் குறித்து எடுத்துரைத்தார்.

      மேலும், தனது 25-வது வயதிலேயே நாட்டிற்காகவும், தன் மக்களின் உரிமைகளுக்காகவும் தனது இன்னுயிரைத் தியாகம் செய்த அவரது வீரத்தையும், தியாகத்தையும் நினைவுகூர்ந்து, அவரது வாழ்க்கை இன்றைய இளைஞர்களுக்கு என்றும் ஒரு சிறந்த முன்மாதிரியாகத் திகழும் என்று புகழாரம் சூட்டினார்.

        இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், மாநிலப் பொதுச்செயலாளர்  மோகன்குமார், நிகழ்ச்சியின் மாநில பொறுப்பாளர்கள் மாநிலச் செயலாளர்  தமிழ்மாறன், பட்டியலணி மாநிலத் தலைவர் காத்தவராயன் பழங்குடியினர் அமைப்பின் தலைவர் ராம்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

         மேலும், மாநிலப் பொருளாளர்  ராஜகணபதி, மூத்த நிர்வாகி  இளங்கோவன், பிரிவு இணைப் பொறுப்பாளர்  வேல்முருகன், மாநில ஊடகத்துறைத் தலைவர்  நாகேஸ்வரன், மகளிரணி மாநிலத் தலைவர்  தாமரைச் செல்வி, சிறுபான்மையினர் அணி தலைவர் சார்லஸ்,  மாவட்டப் பொறுப்பாளர்கள்  நாகராஜ்,  மகேஷ், மாவட்டத் தலைவர்கள்  உலகநாதன்,  கிருஷ்ணராஜ் மற்றும் பட்டியலணி மாநில போது செயலர் வீரமுத்து, பட்டியலணி நிர்வாகிகள்  கஜேந்திரன், கார்த்திகேயன்,  சத்தியமூர்த்தி,  ஜெயலட்சுமி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

      இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாநிலச் செயலாளர் தமிழ்மாறன் மற்றும் பட்டியலணி மாநிலத் தலைவர்  காத்தவராயன் ஆகியோர் செய்திருந்தனர்.