வேலூர் நறுவீ மருத்துவமனையில் 1000 மூட்டு மாற்று அறுவை சிகிச்சைகள் செய்து சாதனை!...

வேலூர் நறுவீ மருத்துவமனையில் 1000 மூட்டு மாற்று அறுவை சிகிச்சைகள் செய்து சாதனை!

வேலூர், நவ.04-
வேலூர் நறுவீ  மருத்துவமனையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மூட்டு மாற்று அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாகச் செய்யப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது என்று மருத்துவமனை தலைவர் முனைவர் ஜி.வி. சம்பத் தெரிவித்துள்ளார்.
           கடந்த 2021 முதல் டாக்டர் வெர்னான் லீ தலைமையில் இயங்கி வரும் இப்பிரிவில் அமெரிக்கத் தயாரிப்பான 'கோரி' (CORI Robot) ரோபோ தொழில்நுட்பம் மூலம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு நோயாளிகள் ஒரே மாதத்தில் விரைவாகக் குணமடைகின்றனர். 
            
      நியாயமான கட்டணத்தில் உயர்தர சிகிச்சை அளிக்கப்படுவதால் தமிழகம், ஆந்திரா மட்டுமின்றி அமெரிக்கா, ஆஸ்திரேலியா, துபாய் போன்ற வெளிநாடுகளிலிருந்தும் நோயாளிகள் இங்கு வருகை தருகின்றனர்.

     மேலும், வெற்றிகரமாக 5 ஆண்டுகளை நிறைவு செய்து 6-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த மருத்துவமனையில் விரைவில் சர்வதேச தரத்தில் 'எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை மையம்' மற்றும் 'செயற்கை கருத்தரிப்பு மையம்' தொடங்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.