ஈரோடு வேளாளர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் (VCET) வெள்ளி விழா ஆண்டு கொண்டாட்டத்தில் இரத்த தானம்!
ஈரோடு வேளாளர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் (VCET) வெள்ளிவிழா ஆண்டு கொண்டாட்டத்தில் இரத்த தானம்
ஈரோடு, அக்.27-
ஈரோடு வேளாளர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் (VCET) வெள்ளிவிழா ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, யுவராஜா அறக்கட்டளையும் (Yuvaraja Foundation) மற்றும் ரோட்டராக்ட் சங்கமும் இணைந்து“ உதிரம் 2.0” (UDHIRAM 2.0) என்ற மாபெரும் இரத்ததான முகாமை நடத்தினர்.
இம்முகாமில் 187 பேர் இரத்ததானம் செய்து உயிர்காக்கும் உன்னதப் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர். இம்முகாமில் லயன்ஸ் கிளப் ஆஃப் ஈரோடு சுப்ரீம் சாரிடபிள் டிரஸ்ட் இரத்த வங்கியில் 114 பேரும், ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இரத்தமையத்தில் 73 பேரும் இரத்ததானம் செய்தனர். இரத்ததானத்தின் அவசியத்தை உணர்ந்து ஏராளமானோர் ஆர்வத்துடன் பங்கேற்று, மனித நேயத்தையும் சமூகப் பொறுப்புணர்வையும் வெளிப்படுத்தினர்.
நிகழ்ச்சிக்கு வேளாளர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் இயற்பியல் துறைப் பேராசிரியரும் ரோட்டராக்ட் சங்கத்தின் ஆலோசகருமான முனைவர் ந. தங்கராஜ் வரவேற்புரை வழங்கினார். வேளாளர் கல்வி அறக்கட்டளை K.யுவராஜா தலைமையுரை ஆற்றினார். வேளாளர் கல்வி அறக்கட்டளையின் செயலர் எஸ்.டி.சந்திரசேகர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
வேளாளர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர் முனைவர் எம்.ஜெயராமன் வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்புத் தலைவரான குகன் நன்றியுரை வழங்கினார். இரத்ததானம் மூலம் பல உயிர்களைக் காப்பாற்றும் நோக்கத்துடன் நடைபெற்ற இம்முகாம், கல்லூரியின் வெள்ளிவிழா ஆண்டு கொண்டாட்டத்தில் சமூக நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கும் சிறப்பு மிக்க நிகழ்வாக அமைந்தது.