மாம்பாக்கத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 257 பயனாளிகளுக்கு 5 கோடியே 11 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன் மற்றும் எம்எல்ஏ சுகுமார் ஆகியோர் வழங்கினர்..
Dhina Kaattru
ராணிப்பேட்டை மாவட்டம் அக்-15
கலவை வட்டத்திற்குட்பட்ட மாம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் சுகுமார், வருவாய் கோட்ட அலுவலர் ராஜி, மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட அலுவலர் கீதா லட்சுமி, மாவட்ட உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அலுவலர் பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும் இந்த சிறப்பு திட்ட முகாமில் அனைத்து துறைகளின் கீழ் வருகை தந்திருந்த மாவட்ட அலுவலர்கள் அரசின் கீழ் பொதுமக்களுக்கு செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து விரிவாக எடுத்துக் கூறினர்கள். அதனைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் துறை, வருவாய்த்துறை, சமூக பாதுகாப்பு திட்டத்துறை, பொது சுகாதாரத்துறை, வேளாண்மை துறை, தோட்டக்கலைத்துறை, மகளிர் திட்டம், உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை உள்ளிட்ட துறைகளின் கீழ் 5 கோடியே 11 லட்சம் மதிப்பீட்டில் 257 பயனாளிகளுக்கு நல திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன் மற்றும் எம்எல்ஏ சுகுமார் ஆகியோர் வழங்கினர்.
முன்னதாக அனைத்து துறைகளின் கீழ் அரங்குகளில் திட்டம் சார்ந்து காட்சிப்படுத்தப்பட்டிருந்த பொருட்களை மாவட்ட வருவாய் அலுவலர் பார்வையிட்டு கேட்டறிந்தார்.
இந்த நிகழ்ச்சியில் கலவை வட்டாட்சியர் வெங்கடேசன் நன்றியுரை தெரிவித்தார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் துணை ஆட்சியர்கள், வருவாய் அலுவலர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் என பலர் கலந்துக் கொண்டனர்.
