மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் (MMHRC) மற்றும் மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாவிட்டி மருத்துவமனை (MSSH) ஆகியவை கடந்த 10 ஆண்டுகளில் 500 ரோபோடிக் அறுவை சிகிச்சைகளைச் செய்து சாதனை!

மதுரை மீனாட்சி மிஷன் மற்றும் மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளின் 500 ரோபோட்டிக் அறுவை சிகிச்சைகள் நிறைவு!


மதுரை, அக். 23-
மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் (MMHRC) மற்றும் மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாவிட்டி மருத்துவமனை (MSSH) ஆகியவை கடந்த 10 ஆண்டுகளில் 500 ரோபோடிக் அறுவை சிகிச்சைகளைச் செய்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளன மிகத் துல்லியமான மருத்துவச் சேவைக்காக நவீன ரோபோட்டி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் இது ஒரு மாபெரும் முன்னேற்றமாகும்.
          குடல் மற்றும் கல்லீரல் சிறுநீரகம் மகளிர் மருத்துவம் மார்பகம் மற்றும் தைராய்டு குழந்தைகள் அறுவை சிகிச்சை புற்றுநோய் அறுவைசிகிச்சை மற்றும் இதயவியல் என பல்வேறு மருத்துவப் பிரிவுகளில் இந்த ரோபோட்டி சிகிச்சைகள் உள்ளடக்கியுள்ளன. 
        தென் தமிழகத்தில் ரோபோ உதவியுடன் செய்யப்படும் பல அறுவைசிகிச்சை முறைகளை முதன்முதலில் இம்மருத்துவ மனைகள் அறிமுகபடுத்தியுள்ளன 2016 ஆம் ஆண்டு முதல் பயன்பாட்டில் உள்ள டா வின்சி ரோபோட்டி சிஸ்டம் மூலம் சுமார் 350 அறுவைசிகிச்சைகளும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட நவீன டூமாய் ரோபோட்டி சிஸ்டம் மூலம் 150-க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகளும் செய்யப்பட்டுள்ளன.
         இந்த நவீன கருவிகள் வழக்கமான மற்றும் லேப்ராஸ்கோப்பிக் தொழில்நுட்பங்களுக்கு பக்கபலமாக இருப்பதுடன் நோயாளிகளின் தனிப்பட்ட உடல்நிலைக்கேற்ப மிகச்சிறந்த சிகிச்சை முறையைத் தேர்வு செய்ய மருத்துவக் குழுவினருக்கு இவை பெரிதும் உதவுகின்றன.
     இது குறித்து மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் மருத்துவ இயக்குநரும், குடல் மற்றும் இரைப்பை சிகிச்சை பிரிவின் முதுநிலை மருத்துவருமான டாக்டர் ரமேஷ் அர்த்தநாரி பேசுகையில் 'ரோபோஇ உதவியுடன் செய்யப்படும் அறுவை சிகிச்சைகளில் 500 என்ற மைல்கல்லை எட்டியிருப்பது, மருத்துவ நிபுணத்துவம், தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் பல்வேறு துறைகளை உள்ளடக்கிய கூட்டு முயற்சி ஆகியவற்றில் எமது தொடர்ச்சியான அரப்பணிப்பைக் காட்டுகிறது. கடந்த 10 ஆண்டுகளில், இத்தொழில்நுட்பத்தின் மூலம் மிகவும் சிக்கலான அறுவை சிகிச்சைகளையும் எங்களால் மிகத்துல்லியமாகவும் பாதுகாப்பாகவும் செய்ய முடிகிறது. இனிவரும் காலங்களில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகளுக்கும் ரோபோட்டிக் தொழில்நுட்பத்தை விரிவுபடுத்த உள்ளோம்.
        தென் தமிழக மக்களுக்கு மிகச்சிறந்த மற்றும் நவீன மருத்துவச் சிகிச்சைகள் எளிதாகக் கிடைப்பதை உறுதி செய்வதே எமது முக்கிய நோக்கமாகும். என்று தெரிவித்தார்.
இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் மருத்துவர்கள் ரமேஷ் அர்த்தநாரி மோகன், பிரதீப், ஜெகதீஸ் சந்திர போஸ், பால் வின்சென்ட், விஜய பாஸ்கர், பத்மா ஆகியோர் உரையாடினர்.
         மேலும் இச்சந்திப்பில் மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் இயக்குநர்  திலீப் கலந்து கொண்டார்.