தேனி மாவட்டத்தில் இளம்/முதல்முறை வாக்காளர்களாகத் தகுதி பெற்றவர்களைப் பதிவு செய்வதற்காக நடைபெற்ற சிறப்பு முகாமில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு!

தேனி மாவட்டம்
இளம்/முதல்முறை வாக்காளர்களாகத் தகுதி பெற்றவர்களைப் பதிவு செய்வதற்காக நடைபெற்ற சிறப்பு முகாமில்  மாவட்ட
 ஆட்சியர் ஆய்வு!

தேனி, அக். 11- தேனி மாவட்டத்தில் (10.10.2026) தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, இளம் / முதல்முறை வாக்காளர்களாகத் தகுதி பெற்றவர்களைப் பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் நடைபெற்று வருவதை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் வ.சிவகிருஷ்ணமூர்த்தி  பார்வையிட்டு
ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின்போது, ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குன்னூர் அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வரும் சிறப்பு வாக்காளர் பெயர் சேர்த்தல் முகாமினை பார்வையிட்டு, புதிய வாக்காளர் சேர்க்கைக்கான படிவங்கள் பூர்த்தி செய்து வழங்கி வருவதை பார்வையிட்டதுடன், வாக்குச்சாவடி நிலைய
அலுவலர்கள் தங்கள் பகுதிகளிலுள்ள 18 வயது பூர்த்தியடைந்த இளம் / முதல்முறை வாக்காளர்களை தவறாமல் பதிவு செய்திட அறிவுறுத்திட வேண்டும் என தெரிவித்தார்.
       அதனைத் தொடர்ந்து, பெரியகுளம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அல்லிநகரம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியிலுள்ள வாக்குச்சாவடி மையம், போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பழனிசெட்டிபட்டி பழனியப்பா வித்யாலயம் அரசு
உதவிபெறும் பள்ளியிலுள்ள வாக்குச்சாவடி மையம், கம்பம் சட்டமன்றத்தொகுதிக்குட்பட்ட சின்னமனூர் ஸ்ரீகிருஷ்ணஐயர் அரசு மேல்நிலைப் பள்ளியிலுள்ள
வாக்குச்சாவடி மையம் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் இன்றும், நாளையும் தேனி மாவட்டத்தில் 1394 வாக்குச்சாவடி மையங்களில் புதிய வாக்காளர் சேர்க்கைக்கான சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
       இம்முகாமில் 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் தவறாமல் படிவம் 6-ஐ
பூர்த்தி செய்து வழங்கி வாக்காளர் பட்டியலில் சேர்ந்து கொள்ளவும், வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ளவும் வாக்காளர்கள் இம்முகாமினை பயன்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் வ.சிவகிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.
      இவ்வாய்வில், உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் செய்யது முகமது, மாவட்ட வழங்கல் அலுவலர் நல்லையா, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் கங்கா, தேனி அல்லிநகரம் நகராட்சி ஆணையாளர்
பார்கவி, வட்டாட்சியர்கள் செந்தில் (ஆண்டிபட்டி), ரத்தினம் (தேனி), பாலசண்முகம் (உத்தமபாளையம்) மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.