பெரம்பலூர் மாவட்டத்தில் காசநோய் இல்லா இயக்கம் மற்றும் ஜோஷ் துவக்க விழா!

பெரம்பலூர் மாவட்டத்தில் 
காசநோய் இல்லா இயக்கம் மற்றும் ஜோஷ் துவக்க விழா

      பெரம்பலூர், அக். 08-
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டம் சார்பில், காசநோய் இல்லா இயக்கம் மற்றும் ஜோஷ் துவக்க விழா மாவட்ட ஆட்சித்தலைவர் அப்துல் ராசிக்  தலைமையில் நடைபெற்றது. 
          இந்நிகழ்ச்சியில், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 47 ஊராட்சிகளுக்கு காசநோய் இல்லா இந்தியா பாராட்டு சான்றிதழ்களையும், காசநோய் ஒழிப்பு பணிகளில் சிறப்பாக பங்களித்து வரும் NCC மற்றும் NSS மாணவர்கள் மற்றும் MY Bharat தன்னார்வலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர்  வழங்கினார். பின்னர், காச நோய் விழிப்புணர்வு தொடர்பான துண்டு பிரசுரங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டார்.
    பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர்  தெரிவித்ததாவது: பாரத பிரதமர் அவர்களின் வழிகாட்டுதலின் படி, காசநோய் இல்லா இந்தியா-2030 என்ற தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின், இலக்கின் முதல் படியாக கடந்த 2025-ஆம் ஆண்டு 20%  காசநோய் பாதிப்பு குறைந்த 28 ஊராட்சிகளுக்கு வெண்கல பதகத்திற்கான சான்றிதழ்களும், 20-40% காசநோய் பாதிப்பு குறைந்த 19 ஊராட்சிகளுக்கு வெள்ளி பதகத்திற்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளது. 80% பாதிப்பு குறைப்பு எனும் இலக்கை அடைந்திட காசநோய் பணியாளர்களோடு அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும். 
ஆரம்ப நிலையில் காசநோயை கண்டறிவது மற்றும் காசநோயாளிகள் முற்றிலும் குணமடைவது இரண்டும் தான் காசநோய் ஒழிப்பின் முக்கியமான பங்கு. இதன் மூலம் காசநோய் பரவுதலை தடுக்க முடியும். Uncontrolled சர்க்கரை வியாதி மற்றும் மது பழக்கம் காசநோய்க்கு அடிப்படை காரணமாக இருக்கிறது. ஆகவே சர்க்கரை நோயாளிகளை ஆரம்பத்திலேயே கண்டறிதல் அவசியமாகிறது. மது மற்றும் போதையின் தீங்குகள் குறித்த விழிப்புணர்வை அனைவரிடத்திலும் ஏற்படுத்த வேண்டும்.
        பெரம்பலூர் மாவட்டத்தில் காசநோய் பணியாளர்கள் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை வீடு வீடாக Active case finding சென்று பணி மேற்கொள்கிறார்கள். நடமாடும் x-ray வாகனம் மூலம் வாரம் ஒரு வட்டாரம் என்ற அடிப்படையில் முன்பயண திட்டம் திட்டமிடப்பட்டு TB screening பணி நடைபெற்று வருகிறது. எனவே அனைவரும் ஒன்றிணைந்து கொரோனாவை வென்றது போல் காசநோயையும் வென்றிட வேண்டும் என தெரிவித்தார்.