சிவகங்கை கென்னடி சமூக வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கான துவக்க விழா!

சிவகங்கை கென்னடி சமூக வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

சிவகங்கை, அக். 22-
சிவகங்கையை அடுத்துள்ள பாசாங்கரை கிராமத்தை மையமாக வைத்து செயல்படும் இந்த கென்னடி சமூக வளர்ச்சி அறக்கட்டளையானது, கடந்த 2013 வது ஆண்டிலிருந்து தொடர்ந்து மக்கள் நலப்பணிகளில் அக்கறை காட்டி, மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள், மரக்கன்று நடுதல், போதை விழிப்புணர்வு, சுற்றுசூழலை பேணிப் பாதுகாப்பது உள்ளிட்ட பல்வேறு நலப்பணிகளை செய்து வருகிறது.
        அந்த வகையில்,  ஒரு லட்சம்  மரக்கன்றுகள் நடுவதென முடிவெடுத்து, முதல் கட்ட  துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது. சமூக ஆர்வலரும், கென்னடி சமூக வளர்ச்சி அறக்கட்டளையின் நிறுவனருமான ஆறு. கென்னடி தலைமையில் முதல் மரக்கன்றினை சிவகங்கை தாலுகா காவல்நிலைய ஆய்வாளர் நடவுசெய்து தொடங்கி வைத்தார்.
       நிகழ்ச்சியில் சார்பு ஆய்வாளர்  ராஜ்குமார், கிராம நிர்வாக அலுவலர்   வெங்கடேசன், வனத்துறை அலுவலர்    பிரவீன், சமூக ஆர்வலர் கொட்டகுடி குருசாமி, சமூக ஆர்வலர் வெங்கடேசன், ஊராட்சி பணித்தளப் பொறுப்பாளர் இருளி, கிராம அம்பலகாரர் பாசாங்கரை முத்துராஜா, ஊராட்சி வார்டு மெம்பர் பெருமாள் உள்ளிட்ட கிராமப் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
     நிகழ்ச்சி ஏற்பாடுகளை கென்னடி சமூக வளர்ச்சி அறக்கட்டளை நிறுவனர் ஆறு. கென்னடி சிறப்பாக செய்திருந்தனர்.