திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெறும் வளர்ச்சி திட்டப் பணிகளைகண்காணிப்பாளர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு ...

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெறும் வளர்ச்சி திட்டப்  பணிகளை
கண்காணிப்பாளர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு 

      திருவண்ணாமலை, அக். 22-
திருவண்ணாமலை மாவட்ட கண்காணிப்பு அலுவலர்/ சமூக நல இயக்குநர் டாக்டர்.இரா.பிருந்தா தேவி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் வந்தனா கார்க் முன்னிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.
திருவண்ணாமலை மாவட்ட கண்காணிப்பு அலுவலர்/ சமூக நல இயக்குநர்  திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர்  முன்னிலையில் கீழ்பென்னாத்தூர் வட்டத்திற்குட்பட்ட மேக்களூர் ஊராட்சியிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தின் செயல்பாடுகள், மருத்துவ சிகிச்சை முறைகள், மருந்து இருப்பு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டசத்து பெட்கங்களை வழங்கினார்.
         தொடர்ந்து மேக்களூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் அடிப்படை வசதிகள், மாணவர்களுக்கு அளிக்கப்படும் உணவின் தரம் குறித்தும், மாணவர்களின் கல்வி குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். மேக்களூர் ஊராட்சியிலுள்ள அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளின் வருகை பதிவேடு. குழந்தைகளின் எடை மற்றும் உயரம் குறித்த விவரங்கள், குழந்தைகளுக்கு அளிக்கப்படும் ஊட்டச்சத்து ணவு முறையாக வழங்கப்படுகிறதா என்பது குறித்தும், உணவு பொருட்கள் இருப்பு குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
      தொடர்ந்து சோமாசிபாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு தானியஈட்டுக் கிடங்கிலுள்ள நியாய விலைக்கடையில் பொதுமக்களுக்கு நியாய விலைப் பொருட்கள் வழங்கியதற்கான பதிவேடுகள் குறித்தும், பொருட்கள் தரமாகவும் முறையாகவும் வழங்கப்படுகிறதா என்பது குறித்தும், பொருட்கள் இருப்பு குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
       தொடர்ந்து, திருவண்ணாமலை மாநகராட்சிக்குட்பட்ட காந்தி நகர் பகுதியிலுள்ள நுண் உரம் தயாரிக்கும் மையத்தின் செயல்பாடுகளையும், மணலூர்பேட்டை சாலையில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதையும் மீத்தேன் வாயு தயாரிப்பு மையத்தின் செயல்பாடுகளையும், செங்கம் சாலையிலுள்ள விலங்கு கருத்தடை மற்றும் பராமரிப்பு மையத்தின் செயல்பாட்டையும், மருந்து இருப்பு குறித்தும், கருத்தடை மற்றும் சிகிச்சை செய்யப்பட்ட விலங்குகளின் விவரம் குறித்தும், வேங்கிக்கால் பகுதியிலுள்ள மழைநீர் வடிகால் கால்வாய் தூர்வாருதல் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
         இந்நிகழ்வுகளில் மாவட்ட வருவாய் அலுலவர் ஆ.சிவசுப்பிரமணியன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணை இயக்குநர் / திட்ட இயக்குநர் பூ.காஞ்சனா, செயற்பொறியாளர் (ஊரக வளர்ச்சி) சிவநாத், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) திருவண்ணாமலை கிழக்கு விமலன், மாவட்ட சமூக நல அலுலவர் கோமதி, மாநகராட்சி ஆணையர் வட்டாட்சியர்கள் மோகன்ராமன், பாலசுப்பிரமணியன், இந்திரா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.