வேலூர் மாவட்ட நீதித்துறை ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!

வேலூர் மாவட்ட நீதித்துறை ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்! 
     வேலூர், அக்.10- விருதுநகர் மாவட்டம் சாத்தூர் குற்றவியல் நடுவர் எண். 2 நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வரும் திருமதி செல்வீஸ்வரி   நீதிபதி குடியிருப்பு வளாகத்தில் வைத்து எறும்பு பொடி அருந்தி தற்கொலை செய்து கொள்ள முயன்று தற்போது மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார்.

    தற்கொலை முயற்சிக்கான காரணம் என்னவென்று அவர்கள் விசாரித்த போது நீதிபதி குடியிருப்பில் நடுவர் அவர்களின் குடும்பத்திற்கு வேலை செய்வது மட்டுமல்லாமல் அவரது மனைவியின் வயதான தாயாருக்கும் அதாவது உடல்நிலை சரியில்லாத தாயாருக்கும் பணிவிடை செய்யும்படி கட்டாயப்படுத்தியதோடு இரவு நீண்ட நேரம் வீட்டு வேலையை செய்ய சொல்லி காலதாமதமாக வீட்டுக்கு அனுப்புவதாகவும், கடந்த மாத சம்பளத்தை இதுவரை அவருக்கு பெற்று வழங்காமல் சாத்தூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் அவர்கள் துன்புறுத்தியதால் மன உளைச்சல் ஏற்பட்டு தற்கொலை முயற்சி மேற்கொண்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
    இழைக்கப்பட்ட அநீதிக்கு நியாயம் கேட்டு  வியாழக்கிழமை 08.10.2026 அன்று மாலை  வேலூர் மாவட்ட நீதிமன்றம் மற்றும் வட்ட நீதிமன்றங்கள் வாயில் முன்பு கவனயீர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது.
  இதில் வேலூர் மாவட்ட நீதித்துறை ஊழியர் சங்க  நிர்வாகிகள்,  உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.