காளையார்கோவிலில் இனிப்பு வழங்கி இடைத்தேர்தல் வெற்றிக்
கொண்டாட்டம்
சிவகங்கை, அக். 11-
மதுராந்தகம், தாராபுரம் இரண்டு தொகுதிகளின் வெற்றியை கொண்டாடும் வகையில் சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் வடக்கு, தெற்கு , கிழக்கு, மேற்கு ஆகிய நான்கு ஒன்றிய தவெக நிர்வாகிகள் காளையார்கோவில் பேருந்து நிலையத்தில் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
சட்டமன்ற உறுப்பினர் குழந்தைராணி நாச்சியார், மாவட்டக்கழக செயலாளர் முத்துபாரதி ஆகியோரது அறிவுறுத்தலின்பேரில், இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
காளையார்கோவில் ஒன்றியக் கழகச் செயலாளர்களான அன்புராஜா, மதன், எக்ஸ் ஆர்மி மறவமங்கலம் சத்தியமூர்த்தி, சுனில்கவாஸ்கர் ஆகியோரது தலைமையிலும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்களான பிரிண்ஸி லிவி, செல்வமீனாள் ஆகியோரது முன்னிலையிலும் காளையார்கோவில் கோபுரவாசல் எதிர்ப்புறம் கேக் வெட்டியும், பட்டாசு வெடித்தும் , பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்நனர்.
இதில் மாவட்ட வழக்கறிஞரணி அமைப்பாளர் சூரக்குளம் சுரேஷ்குமார், மாவட்ட தொண்டரணி சஞ்சீவிகுமார் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, கிளைக்கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதனிடையே சிவகங்கை மண்டல தவெக ஐடி விங் இணை ஒருங்கிணைப்பாளர் ஜனார்த்தனன் இடைத்தேர்தல் வெற்றிக்கொண்டாட்டத்தை நம்மிடம் பகிர்ந்திருக்கிறார்.