ஏற்காடு மலைப்பகுதியில் மிக கனமழை பெய்து வருவதால் சுற்றுலாப் பயணிகள் ஏற்காடு வருவதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது : சேலம் மாவட்ட ஆட்சியர் தகவல்...
ஏற்காடு மலைப்பகுதியில் மிக கனமழை பெய்து வருவதால் சுற்றுலா பயணிகள் ஏற்காடு வருவதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது :
சேலம் மாவட்ட ஆட்சியர் தகவல்...
சேலம், அக்.25-
சேலம் மாவட்டம், ஏற்காடு மலைப்பகுதியில் மிக கனமழை பெய்து வருவதால் சுற்றுலா பயணிகள் ஏற்காடு வருவதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத், தெரிவித்துள்ளதாவது,
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதையொட்டி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தொடர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, சேலம் மாவட்டம், ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக அதிகளவிலான மழை பெய்து வருகிறது. இதனால் மலைப்பாதைகள் வழியாக ஆங்காங்கே தண்ணீர் வழிந்தோடுகிறது.
எனவே, வரும் நாட்களில் மழைபெய்ய வாய்ப்புள்ளதாலும், முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கையாக, உள்ளூர் பொதுமக்கள் மழை பெய்யும் நேரத்தில் வாகனங்களில் பயணிப்பதை தவிர்க்க வேண்டும்.
அதே போன்று சுற்றுலாப் பயணிகள் வாகனங்களில் ஏற்காடு வருவதை முற்றிலும் தவிர்த்திட வேண்டும்.
மேலும், பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பினை நல்கிட வேண்டுமெனவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத், தெரிவித்துள்ளார்.