திருப்பத்தூரில் தமிழ்நாடு ஒருங்கிணைந்த பத்திரிகையாளர்கள் சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு...

திருப்பத்தூரில்
தமிழ்நாடு ஒருங்கிணைந்த பத்திரிகையாளர்கள் சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு...


திருப்பத்தூர், அக். 24-
தமிழ்நாடு ஒருங்கிணைந்த பத்திரிகையாளர்கள் சங்கத்தின்' 4-ஆம் ஆண்டுத் துவக்க விழாவையொட்டி மாநிலம் தழுவிய அளவில் சிறப்பு மலர் தயாரிக்கப்பட்டது.
        இளம் பத்திரிகையாளர்கள்  உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கும் பயன்படத்தக்க வகையில் உருவாக்கப்பட்ட அந்த மலரின் முதல் பிரதியை,   சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரன், தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள தனது அறையில் கடந்த 9 ஆம் தேதி வெளியிட்டார் .
      முதல் பிரதியை சங்கத்தின் நிறுவனர் ஜி.கே. ஸ்டாலின், மற்றும் சங்கத்தின் மாநிலத் தலைவர் சந்திரசேகரன், மாநிலப் பொதுச் செயலாளர் ப.வீரராகவன், மாநிலப்பொருளாளர் இந்திரகுமார் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். 
     பின்னர் மக்கள் தொடர்பு அலுவலகம் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறையின் கூடுதல் இயக்குனர் இரா. பாஸ்கரன் அவர்களை அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து பத்திரிகையாளர்களின் நீண்டநாள் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. 
     இதைத் தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் நல்லசிவன் அவர்களிடம் திருப்பத்தூர் மாவட்டத் தலைவர் அருண்குமார் தலைமையில் மாநில பொது செயலாளர் வீரராகவன் மலர் புத்தகம் மற்றும் பத்திரிகையாளர்கள்  மாநிலம் தழுவிய அளவில், மாவட்ட / தாலுகாக்களில் பணிபுரியும் பத்திரிகையாளர்களுக்கு வீட்டுமனை, இலவசப் பேருந்துப் பயண அட்டை, பத்திரிகையாளர் நல வாரியத்தில் சங்கத்தின் பிரதிநிதி ஒருவரை  நலவாரிய உறுப்பினராக சேர்த்தல்'  உள்ளிட்ட 7  அம்சக் கோரிக்கைகள் அடங்கிய மனு அளிக்கப்பட்டது. 
    கோரிக்கைகள் அடங்கிய மனுவினை படித்துப் பார்த்த மாவட்ட ஆட்சியர் வீட்டு மனை வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்தார்.
        மேலும் மற்ற கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதில் திருப்பத்தூரில் மாவட்ட செயலாளர் சங்கர், மாவட்ட பொருளாளர் சீனிவாசன், மாநில செயற்குழு உறுப்பினர் பாபு மற்றும் மாவட்ட நிர்வாகிகள் மனோகரன் செல்வம், நாகலிங்கம், புருஷோத்தமன், விக்னேஷ், மா.கார்த்திகேயன், திருமலை, கோபி, அலாவுதீன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.