திண்டுக்கல்லில்
பாலின பாகுபாடற்ற சமுதாயம் வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி!
திண்டுக்கல், அக். 08-
திண்டுக்கல் மாவட்டம் அமைதி அறக்கட்டளை சார்பாக, பாலின பாகுபாடற்ற சமுதாயத்தை உருவாக்குதல், பெண் கல்வி, குழந்தை திருமண தடுப்பு மற்றும் பெண்களுக்கு மேம்பாடு, அதிகாரம் அளித்தலை வலியுறுத்தி ஆட்டோ விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
திண்டுக்கல் மற்றும் வேடசந்தூர் ஒன்றியங்களை சார்ந்த கிராமங்களில் நடைபெற்ற இப்பேரணிக்கு அமைதி அறக்கட்டளை தலைவர் ரூபபாலன் தலைமை தாங்கினார். தன்னார்வலர் கௌரி வரவேற்புரை ஆற்றினார். அறக்கட்டளையின் மேலாளரும், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குழு உறுப்பினருமான டாக்டர் ஆ.சீனிவாசன் முன்னிலை வகித்தார். சமூக நல பயிற்சி அலுவலர் பவித்ரா கருத்துரை வழங்கினார்.
நாகம்பட்டியில் தொடங்கிய பேரணி, கருக்காம்பட்டி வரையிலான சுமார் 15 கிராமங்கள் வழியாக நடைபெற்றது. ஒவ்வொரு கிராமத்திலும் தன்னார்வலர்கள் மற்றும் பாலின பாகுபாடு வன்முறை தடுப்பு மற்றும் கண்காணிப்பு குழு உறுப்பினர்கள் பேரணியை சிறப்பித்தனர்.
தன்னார்வலர்கள் கௌரி, உமாமகேஸ்வரி, மீனாட்சி, பொன்னரசி மற்றும் குழு பிரதிநிதிகள் முருகம்மாள், கவிதா, அழகம்மாள், மாரியம்மாள், மகாமுனி, தேவநாயகம், தங்கதுரை, மணி, ஆறுமுகம், முருகன் ஆகியோரது வழிகாட்டுதலில் பேரணி நடைபெற்றது.
இதன் மூலம் சுமார் 1,200 பேர் குடும்ப வன்முறை இல்லா சமுதாயத்தை உருவாக்குதல் குறித்தும், ஏதேனும் புகார்கள் இருப்பின் திண்டுக்கல் மற்றும் வேடசந்தூர் ஒன்றியங்களில் அமைக்கப்பட்டுள்ள அமைதி அறக்கட்டளையின் சமரச மையம் மூலம் தீர்வு காண்பது குறித்தும் விழிப்புணர்வு பெற்றனர்.
இப்பேரணியை ஒருங்கிணைப்பாளர்கள் முனியாண்டி, ரேணுகாதேவி, நதியா, புவனேஸ்வரி, சங்கீதா ஆகியோர் வழிநடத்தினர். இறுதியில் ராஜேஸ்வரி நன்றியுரை கூறினார்.