கோவை கல்லூரி மாணவர்களிடம் ‘மாணவர் குரல்’ நிகழ்ச்சி குறித்து விழிப்புணர்வு!

கோவை கல்லூரி மாணவர்களிடம் ‘மாணவர் குரல்’ நிகழ்ச்சி குறித்து விழிப்புணர்வு

   கோவை, அக். 08-
சென்னை தீவுத்திடலில் வருகின்ற அக்டோபர் 10 ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடைபெற உள்ள “மாணவர் குரல்” நிகழ்ச்சியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர் ராகுல் காந்தி கலந்து கொள்ள உள்ளார்.
       இதனை முன்னிட்டு, கோவையில் கல்லூரி மாணவ, மாணவிகளிடையே “மாணவர் குரல்” நிகழ்ச்சி தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.  இதில், அகில இந்திய மகிளா
காங்கிரஸ் கமிட்டி உறுப்பினரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயல்தலைவரும், கோயம்புத்தூர் மாநகராட்சி மாமன்ற உறுப்பினருமான டாக்டர் ரா. காயத்ரி கலந்து கொண்டு, கல்லூரி மாணவர்களிடம் நிகழ்ச்சி தொடர்பான தகவல்களை விளக்கினார்.
          அப்போது, அக்டோபர் 10ஆம் தேதி நடைபெற உள்ள “மாணவர் குரல்” நிகழ்ச்சியில் ராகுல் காந்தியுடன் மாணவர்கள் தங்களது கருத்துகள் மற்றும் கேள்விகளைப் பகிர்ந்து கொண்டு உரையாடுவதற்கான வாய்ப்புகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
       மேலும், மாணவர்கள் QR Code-ஐ ஸ்கேன் செய்து பதிவு செய்வது எப்படி, அதன் மூலம் ராகுல் காந்தியுடன் உரையாடுவதற்கான வாய்ப்பை பெறுவது எப்படி என்பது குறித்தும் செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.