டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க செய்ய வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு!


டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க செய்ய வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு...

வேலூர், அக்.28-
வேலூர் மாநகராட்சி ஆணையர் அ. கேத்ரின் சரண்யா,   டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவ மாணவிகள் இடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற உத்தரவு பேரில், நேற்று (28.10.2026) சுகாதார அலுவலர் சிவகுமார் தலைமையில், மண்டலம் 3, சாய்நாதபுரம் கிருஷ்ணசாமி முதலியார் நிதி உதவி மேல்நிலைப் பள்ளியில்  மாணவ மாணவிகளுக்கு  டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க செய்ய வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
       டெங்கு காய்ச்சலை பரப்பக்கூடிய ஈடிஸ்  கொசுக்கள் சுத்தமான நீரில் தான் உற்பத்தியாகும் டயர்கள் உடைந்த பிளாஸ்டிக் டப்பாக்கள், தேங்காய் ஓடுகள், பிளாஸ்டிக் பாட்டில்கள் இதுபோன்ற பொருட்களில் மழை நீர் தேங்கும் போது கொசுக்கள் உற்பத்தியாகும் இது போன்ற பொருட்களில் மழை நீர் தேங்காதவாரு அகற்ற வேண்டும் என்றும் வீடுகளில் சேமித்து வைக்கும் குடிநீர் பாத்திரங்களை மூடி வைக்க வேண்டும். சுகாதாரப் பணியாளர்கள் வரும்போது அவர்களுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என விழிப்புணர்வு வழங்கி உறுதிமொழி ஏற்கப்பட்டது. 
       இதில் தலைமை ஆசிரியர் கவிதா மற்றும் ஆசிரியர்கள் துப்புரவு ஆய்வாளர் அருண்குமார், துப்புரவு ஆய்வாளர் ராதா மற்றும் ஹெல்த் இன்ஸ்பெக்டர் அனைவரும் கலந்து கொண்டனர்.