கிம்ஸ் ஹெல்த் நாகர்கோவில் ஆய்வக மருத்துவ சேவையில் குறிப்பிடத்தக்க சாதனை!

கிம்ஸ் ஹெல்த் நாகர்கோவில்
ஆய்வக மருத்துவ சேவையில் குறிப்பிடத்தக்க சாதனை!
     
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில், ஆஸ்டர் டிஎம் குவாலிட்டி கேர் லிமிடெட் நிறுவனத்தின் ஓர் அங்கமான கிம்ஸ் ஹெல்த் நாகர்கோவில், நவீன மருத்துவத் தொழில் நுட்பங்கள் மற்றும் அதிநவீன கருவிகளின் உதவியுடன் நோய்களைத் துல்லியமாகக் கண்டறியும் மேம்பட்ட பரிசோதனைகள் மற்றும்
உரிய நேரத்தில் பரிசோதனை முடிவுகளை வழங்குவதில் மேலும் ஒரு குறிப்பிடத்தக்க
சாதனையை எட்டியுள்ளது. 
      இதற்கு மருத்துவ நோயியல் நிபுணர்கள் (Pathologists) மற்றும்
நுண்ணுயிரியல் நிபுணர்களை உள்ளடக்கிய திறமையான மருத்துவக் குழு முக்கிய பங்காற்றி வருகிறது.
நாகர்கோவில் அருகே சுங்கான்கடையில் செயல்பட்டு வரும் கிம்ஸ் ஹெல்த் நாகர்கோவில் மருத்துவமனை, தொடங்கப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்குள் தென்தமிழக மக்களுக்கு மேம்பட்ட மருத்துவ சிகிச்சைகள் மற்றும் தரமான சுகாதார சேவைகளை வழங்கி வருகிறது.
    அதிநவீன மருத்துவ சிகிச்சைகளைப் பெறுவதற்காக பிற நகரங்களுக்கு பயணம் செய்ய
வேண்டியிருந்த கன்னியாகுமரி மற்றும் தென் தமிழகத்தின் அருகிலுள்ள மாவட்டங்களைச்
சேர்ந்த மக்கள், தற்போது தங்கள் வீட்டிற்கு அருகிலேயே உயர்தர மூன்றாம் நிலை மருத்துவச் சேவைகளைப் பெற்று வருகின்றனர்.
நோய்களைத் துல்லியமாகக் கண்டறியும் நோக்கில், சர்வதேச தரத்திலான மருத்துவத் தொழில் நுட்பங்களுடன் கூடிய மேம்பட்ட நோய் கண்டறியும் பரிசோதனை வசதிகளுடன்
கிம்ஸ் ஹெல்த் நாகர்கோவில் செயல்பட்டு வருகிறது.

   கடந்த 10 மாதங்களில் மட்டும் 1,100-க்கும் மேற்பட்ட ஹிஸ்டோபாதாலஜி (Histopathology) 
பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும், 960 சைட்டாலஜி (Cytology) பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அறுவை சிகிச்சையின் போது எடுக்கப்படும் திசு மாதிரிகளில் நோய் பாதிப்பு உள்ளதா அல்லது அதன் தன்மை மற்றும் அளவு என்ன என்பதை விரைவாகக் கண்டறிய உதவும் 53 ஃப்ரோஸன் செக்ஷன் (Frozen Section) பரிசோதனைகள் மருத்துவமனையிலேயே
மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நோய் கண்டறியும் பரிசோதனை சேவைகளில் எட்டப்பட்டுள்ள இந்த குறிப்பிடத்தக்க
சாதனையை கொண்டாடும் வகையில், கிம்ஸ் ஹெல்த் நாகர்கோவிலில் கேக் வெட்டும்
நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கிம்ஸ் ஹெல்த் திருவனந்தபுரத்தின் ஆய்வக மருத்துவ இயக்குநர் டாக்டர் சமிதா நாயர், கிம்ஸ் ஹெல்த் நாகர்கோவில் நோயியல் துறைத் தலைவர்
டாக்டர் பினிட்டா ஷெரின், நோயியல் நிபுணர் டாக்டர் ஜான் வெர்ஜின், நுண்ணுயிரியல்
நிபுணர் டாக்டர் லட்சுமி ஆகியோருடன் மருத்துவத் துறையைச் சேர்ந்த மருத்துவர்கள் மற்றும்
மருத்துவமனை நிர்வாகக் குழுவினரும் கலந்து கொண்டனர்.

    ஆஸ்டர் டிஎம் குவாலிட்டி கேர் லிமிடெட் நிறுவனத்தின் ஓர் அங்கமாக செயல்பட்டு வரும்
கிம்ஸ் ஹெல்த் நாகர்கோவில், இப்பகுதி மக்களுக்கு மேம்பட்ட மற்றும் முழுமையான
மருத்துவச் சேவைகள் கிடைப்பதை தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது. சிறந்த மருத்துவச்சேவைகள் பெருநகரங்களுக்கு மட்டுமே கட்டுப்படுத்தப்படாமல், அவற்றைக் கடந்து
அனைத்து பகுதிகளிலும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில், கன்னியாகுமரி மற்றும் அண்டை மாவட்ட மக்களுக்கு மேம்பட்ட மூன்றாம் நிலை மருத்துவச் சேவைகளை
அவர்களின் அருகாமையிலேயே வழங்கி வருகிறது.
2024 செப்டம்பரில் தொடங்கப்பட்ட கிம்ஸ் ஹெல்த் நாகர்கோவில் மருத்துவமனை, குறுகிய காலத்திலேயே இப்பகுதி மக்களுக்கு முழுமையான, நவீன மற்றும் மேம்பட்ட மூன்றாம் நிலை
மருத்துவச் சேவைகளை வழங்கும் முக்கிய மருத்துவ மையமாக உருவெடுத்துள்ளது. பல உறுப்பு மாற்று சிகிச்சை (Multi-Organ Transplant) மற்றும் விரிவான புற்றுநோய் சிகிச்சை (Comprehensive Oncology) உள்ளிட்ட உயர்தர மருத்துவச் சேவைகளையும் இம்மருத்துவமனை
வழங்கி வருகிறது.