அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் மாபெரும் அன்னதானம்...

அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் மாபெரும் அன்னதானம். 

திருப்பூர், அக்.23-
திருப்பூர் சாந்தி தியேட்டர்  அருகே அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் திருப்பூர் மாவட்ட துணை தலைவர் பிரபு ஏற்பாட்டில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், ஆசாத் ஹிந்த் சர்க்கார் அமைத்த நாளை போற்றும் விதமாக அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தேசத்தந்தை நேதாஜி  திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. 
   பின்பு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அறுசுவை அன்னதானம் வழங்கும் விழாவினை மத்திய குழு உறுப்பினர் திருப்பூர் மாவட்ட பொதுச்செயலாளர் தேளி காளிமுத்து  துவக்கி வைத்தார். 
    மேலும் இந்த நிகழ்வில் மத்திய குழு உறுப்பினர் . ராஜசேகர்,மாவட்டத் தலைவர் நெல்லை.தாமோதரன், மாவட்டத் துணைத் தலைவர்,டெல்டா தனசேகர், வெள்ளத்துரை, செல்வம்,மாவட்ட செயலாளர் போலீஸ் கார்த்தி,சேதுபதி பாண்டியன், மாவட்ட தொழிற்சங்க பொதுச் செயலாளர் ரமேஷ்,மாவட்ட இளைஞரணி பொறுப்பாளர்கள், மாவட்ட தொழிற்சங்க பொறுப்பாளர்கள்,
அவிநாசி ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் நகர கிளை பொறுப்பாளர்கள்  கலந்து கொண்டனர்.