புதுச்சேரியில் தென்மண்டல அழைப்பாளர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டிகள்!

புதுச்சேரியில் தென்மண்டல அழைப்பாளர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டிகள் 
புதுச்சேரி, அக்.23-
புதுச்சேரி உப்பளம் ராஜீவ்காந்தி உள்விளையாட்டு அரங்கில் தென்மண்டல அழைப்பாளர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி தொடங்கியது. பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்ற  இப்போட்டியை அமைச்சர்கள் வி.பி. சிவக்கொழுந்து, ராஜவேலு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

யூனியன் பிரதேச புதுச்சேரி அமெச்சூர் கைப்பந்து சங்கம் மற்றும் காந்திராம் நற்பணி இயக்கம் சார்பில், தென்மண்டல அழைப்பாளர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி 2026 தொடங்கியது. புதுச்சேரி உப்பளத்தில் உள்ள ராஜீவ்காந்தி உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இப்போட்டியை, குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் வி.பி. சிவக்கொழுந்து, கலை மற்றும் பண்பாட்டுத்துறை அமைச்சர் ராஜவேலு ஆகியோர் தொடங்கி வைத்தனர். உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் நிகழ்ச்சியில் பங்கேற்றார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் முன்னிலை வகித்தார். 
  இப் போட்டியில் தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா, தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கைப்பந்து வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். 
     22-ஆம் தேதி வரை நடைபெற்ற போட்டியில் முதல்பரிசு வென்ற மாணவ,  மாணவிகளுக்கு முதல்வர் ரங்கசாமி கேடயம் வழங்கினார்.