விழுப்புரம் மாவட்ட பெருந்திட்ட வளாக மைதானத்தில் இருந்து,

Dhina Kaattru


விழுப்புரம் மாவட்ட பெருந்திட்ட வளாக மைதானத்தில் இருந்து, மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கச் செல்லும் மாணவ, மாணவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஷேக் அப்துல் ரஹ்மான் அன்று (அக். 14) வாழ்த்தி, அவர்கள் பயணம் செய்யும் பேருந்தினை கொடியசைத்து வழியனுப்பி வைத்தார். இந்நிகழ்வின்போது, மாணவ, மாணவிகள் விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பாகப் பங்கேற்று வெற்றி பெற மாவட்ட ஆட்சியர் வாழ்த்துத் தெரிவித்தார். இதில், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் ஆழிவாசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.