தமிழ்நாடு ஒருங்கிணைந்த பத்திரிகையாளர்கள் சங்கத்தின் சிறப்பு மலர் வெளியீட்டு விழா
சென்னை, அக். 11-
தமிழ்நாடு ஒருங்கிணைந்த பத்திரிகையாளர்கள் சங்கத்தின் 4-ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி தயாரிக்கப்பட்ட சிறப்பு மலரை ஜே.சி.டி. பிரபாகரன் வெளியிட்டார்.
தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள தனது அறையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிறப்பு மலரின் முதல் பிரதியை சங்கத்தின் நிறுவனர் ஜி.கே. ஸ்டாலின், மாநிலத் தலைவர் சந்திரசேகரன், மாநிலப் பொதுச் செயலாளர் ப. வீரராகவன், மாநிலப் பொருளாளர் இந்திரகுமார் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
நிகழ்ச்சியில் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் கருணாநிதி, மாநிலத் துணைச் செயலாளர் சிதம்பரம் மற்றும் சென்னை நிர்வாகிகள் பாலச்சந்தர், மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, மக்கள் தொடர்பு மற்றும் தமிழ் வளர்ச்சித் துறையின் கூடுதல் இயக்குநர் இரா. பாஸ்கரனை அவரது அலுவலகத்தில் சங்க நிர்வாகிகள் நேரில் சந்தித்து, பத்திரிகையாளர்களின் நீண்டகாலக் கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர்.
அந்த மனுவில், மாநிலம் முழுவதும் மாவட்ட மற்றும் வட்டார அளவில் பணியாற்றும் பத்திரிகையாளர்களுக்கு வீட்டுமனை வழங்குதல், இலவசப் பேருந்துப் பயண அட்டை வழங்குதல், பத்திரிகையாளர் நல வாரியத்தில் சங்கத்தின் பிரதிநிதி ஒருவரை உறுப்பினராகச் சேர்த்தல் உள்ளிட்ட ஏழு அம்சக் கோரிக்கைகள் இடம்பெற்றிருந்தன.
மனுவைப் பெற்றுக்கொண்ட கூடுதல் இயக்குநர் இரா. பாஸ்கரன், கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தார்.