வஃக்பு சொத்துக்களை மீட்டு அவற்றின் வருவாயை ஏழை எளிய இஸ்லாமிய மக்களின் கல்வி, மருத்துவம் மற்றும் வாழ்வாதாரத்திற்குப் பயன்படுத்த வேண்டும்!

வஃக்பு சொத்துக்களை மீட்டு அவற்றின் வருவாயை ஏழை எளிய இஸ்லாமிய மக்களின் கல்வி, மருத்துவம் மற்றும் வாழ்வாதாரத்திற்குப் பயன்படுத்த வேண்டும்!

     வேலூர், அக்.08-
வேலூர்  மாவட்டம், திருப்பத்தூர் நகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் அமைந்துள்ள வஃக்பு வாரியத்திற்குச் சொந்தமான மசூதிகள், தர்காக்கள் மற்றும் அறக்கட்டளை சொத்துக்களில் பெருமளவில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும்,  நடவடிக்கைகள் எடுக்க கோரி  மக்கள் சட்ட உரிமைகள் கழகத்தினர் பலமுறை வஃக்பு வாரியத்திற்கும் தமிழக அரசிற்கும்  புகார் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்வில்லை எனக் கூறி திருப்புத்தூரைச் சேர்ந்த 80-க்கும் மேற்பட்ட இஸ்லாமிய மக்கள் ஒன்று சேர்ந்து வேலூரில் உள்ள தமிழ்நாடு வஃக்பு வாரிய வேலூர் மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
     ​    மேலும், ​முறைகேடாக ஆக்கிரமிக்கப்பட்ட வஃக்பு சொத்துக்களை மீட்டு, அவற்றின் வருவாயை ஏழை எளிய இஸ்லாமிய மக்களின் கல்வி, மருத்துவம் மற்றும் வாழ்வாதாரத்திற்குப் பயன்படுத்த வேண்டும் என்றும், உடனடியாக வஃக்பு நிர்வாகத்திற்குத் தேர்தல் நடத்தி புதிய நிர்வாகிகளைத் தேர்வு செய்ய வேண்டும் என்றும் என இஸ்லாமிய மக்கள் கோரிக்கை வைத்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.