ஸ்ரீ சக்தி அம்மாவின் தெய்வீக அருளுடன் வாலாஜா டிவைன் கஃபே முதலாம் ஆண்டு விழா மற்றும் டிவைன் கஃபேவின் 22-ஆம் ஆண்டு விழா! கொண்டாட்டம்!

ஸ்ரீ சக்தி அம்மாவின் தெய்வீக அருளுடன் வாலாஜா டிவைன் கஃபே முதலாம் ஆண்டு விழா மற்றும் டிவைன் கஃபேவின் 22-ஆம் ஆண்டு விழா கொண்டாட்டம்! 

     வேலூர், அக்.18-வேலூர் மாவட்டம், வேலூர் ஸ்ரீ சக்தி அம்மாவின் தெய்வீக அருளாசியுடன், வாலாஜாவில் அமைந்துள்ள டிவைன் கஃபேவின் முதலாம் ஆண்டு விழா மற்றும் டிவைன் கஃபே நிறுவனத்தின் 22-ஆம் ஆண்டு விழா, 15.10.2026, வியாழக்கிழமை அன்று வாலாஜா டிவைன் கஃபே வளாகத்தில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
      ஸ்ரீ நாராயணி குழுமங்களின் இயக்குநரும், அறங்காவலருமான பேராசிரியர் டாக்டர் என். பாலாஜி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், சிறப்பு விருந்தினர்களாக விஜய் டிவி நிகழ்ச்சித் தொகுப்பாளரும், நடிகரும், தொழில்முனைவோருமான  மா.கா.பா. ஆனந்த் மற்றும் மாதம்பட்டி குழுமங்களின் தலைவர் மாதம்பட்டி ரங்கராஜ் ஆகியோர் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.        
      மேலும், ஸ்ரீ சக்தி அம்மாவின் தாயார் திருமதி ஜோதி அம்மாள், திருமதி சாந்தி பாலாஜி மற்றும் டிவைன் கஃபே மற்றும் ஸ்ரீ சுகி  பார்மசி  குழுமங்களின் இயக்குநர்  ஸ்ரீநாத் பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டனர். ஸ்ரீ நாராயணி மருத்துவமனை, ஸ்ரீ சுகி பார்மா மற்றும் டிவைன் கஃபே நிறுவனங்களின் ஊழியர்களும் இவ்விழாவில் பங்கேற்று விழாவைச் சிறப்பித்தனர்.
       விழாவின் சிறப்பம்சமாக, சிறப்பாகப் பணியாற்றிய டிவைன் கஃபே மேலாளர்கள் மற்றும் மருத்துவமனையின் பல்வேறு துறைகளின் தலைவர்களுக்கு (HODs), அவர்களின் அர்ப்பணிப்பு, கடின உழைப்பு மற்றும் சிறப்பான பங்களிப்பைப் பாராட்டி விருதுகள் வழங்கப்பட்டன.

      டிவைன் கஃபேவின் வளர்ச்சி, சேவைத் தரம் மற்றும் வாடிக்கையாளர் திருப்தியை மேலும் மேம்படுத்தும் நோக்கில் நடைபெற்ற இவ்விழா, நிறுவனத்தின் வளர்ச்சிப் பயணத்தில் மற்றுமொரு முக்கிய மைல்கல்லாக அமைந்தது.
     ஸ்ரீ சக்தி அம்மாவின் தெய்வீக அருளாசியுடன், டிவைன் கஃபே தொடர்ந்து வளர்ச்சியடைந்து, தனது சேவையை மேலும் விரிவுபடுத்தி, மக்களுக்கு சிறப்பான சேவையை வழங்கும் என்ற நம்பிக்கையுடன் விழா இனிதே நிறைவுற்றது.