புதுச்சேரி பாஜக சார்பில் ‘வளர்ச்சியடைந்த பாரதம் 2047’ மாபெரும் ரங்கோலி நிகழ்ச்சி !

புதுச்சேரி பாஜக சார்பில் ‘வளர்ச்சியடைந்த பாரதம் 2047’ மாபெரும் ரங்கோலி நிகழ்ச்சி !

    புதுச்சேரி, அக்.11-பாரதப் பிரதமர்  நரேந்திர மோடி  பிறந்தநாளை முன்னிட்டு  (PM Seva Sankalp Abhiyan) புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் ‘வளர்ச்சியடைந்த பாரதம் 2047’ என்ற தலைப்பில் மாபெரும் ரங்கோலி நிகழ்ச்சி லாஸ்பேட் விவேகானந்தா  மேல்ப்பள்ளியில் நடைபெற்றது. 
    இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர்  கைலாஷ்நாதன்  சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

      புதுச்சேரி பாஜக மாநிலத் தலைவர் V.P.ராமலிங்கம், Ex-MLA  தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநில உள்துறை அமைச்சர்  நமச்சிவாயம், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வகணபதி, சட்டமன்ற உறுப்பினர்  ஜான்குமார், நிகழ்ச்சியின் மாநிலப் பொறுப்பாளர்  ஜெயலட்சுமி, முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், மாநிலப் பொதுச் செயலாளர்கள்  மோகன்குமார், லட்சுமிநாராயணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

      மேலும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள்  செல்வம்,  தங்கவிக்ரமன்,  தீப்பாய்ந்தான்,  அசோக்பாபு, மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர்  இளங்கோவன்,  மாநிலத் துணைத் தலைவர்கள்  ரத்தினவேல், ஜெயக்குமார், மாநிலச் செயலாளரும்  PM Seva Sankalp Abhiyan மாநில இணை பொறுப்பாளரும் தமிழ்மாறன், மாநில அணி தலைவர்கள்   தாமரைச்செல்வி,  பாரதிமோகன்,  மாவட்ட பொறுப்பாளர் வெற்றிசெல்வம், மாவட்டத் தலைவர்கள் உலகநாதன்,  கிருஷ்ணராஜ்,  அனிதா, சுகுமார் மற்றும் லாஸ்பேட் தொகுதி தலைவர்  பன்னீர்செல்வம் உள்ளிட்ட பல்வேறு தொகுதி தலைவர்கள் பாஜக மாநில அணி, பிரிவு, மாவட்ட, தொகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டு நிகழ்ச்சியைச் சிறப்பித்தனர்.