பரமக்குடியில் தியாகி வே.இம்மானுவேல் சேகரனார் 102-வது பிறந்தநாள் விழா !

பரமக்குடியில் 
தியாகி வே.இம்மானுவேல் சேகரனார் 102-வது பிறந்தநாள் அரசு விழா 
       ராமநாதபுரம், அக்.10-
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகே அரசு சார்பில் கட்டப்பட்டுள்ள மணிமண்டபத்தில்  சுதந்திர போராட்ட வீரர் தியாகி வே.இம்மானுவேல் சேகரனாரின் 102-வது பிறந்தநாள் - அரசு விழாவையொட்டி, அன்னாரின் முழுதிருவுருவச்சிலைக்கு தமிழ்நாடு சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் பெ.மதன் ராஜா, தமிழ்நாடு  இயற்கை வளங்கள் துறை அமைச்சர் மரு.டி.கே.பிரபு ஆகியோர் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள். 
      அது சமயம், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன், ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே.நவாஸ்கனி , 
பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் கே.கே.கதிரவன், சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர்  குழந்தைராணி நாச்சியார், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர்  இளங்கோவன், ராமநாதபுரம் வளர்ச்சி கூடுதல் ஆட்சியர்
திவ்யான்ஷீநிகம், பரமக்குடி சார் மரு.ச.வினோதினி ஆகியோர் உடன் இருந்தனர்.
        தொடர்ந்து, மணிமண்டப கூட்ட அரங்கில், தமிழ்நாடு அரசு செய்தி - மக்கள் தொடர்பு துறை சார்பில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், பரமக்குடி சார் ஆட்சியர் மரு. ச.வினோதினி அனைவரையும் வரவேற்றார்.
        விழாவில், தமிழ்நாடு சிறு, குறு நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் பெ.மதன் ராஜா, தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் மரு.டி.கே. பிரபு ஆகியோர்  வருவாய் பேரிடர், மேலாண்மைத்துறை, தாட்கோ, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தோட்டக் கலைத்துறை, மாவட்டத் தொழில் மையம் சார்பில் 76 பயனாளிகளுக்கு 78,95,000 மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
        விழாவினை, செய்தி - மக்கள் தொடர்பு மாவட்ட அலுவலர் சி.சாலி தளபதி சிறப்பாக தொகுத்து வழங்கினார்.
        விழாவில்,  பரமக்குடி முன்னாள் எம்.எல்.ஏ.செ.முருகேசன், பரமக்குடி நகர்மன்றத் தலைவர் சேதுகருணாநிதி, துணைத் தலைவர் கே. ஏ. எம். குணா, நகர்மன்ற உறுப்பினர் வடமலையான், செயற்பொறியாளர் குருதிமாறன் உள்பட அரசு அலுவலர்கள், தவெ.க . மாவட்டச் செயலாளர்கள் மதன், மலர்விழி, பரமக்குடி நகரச் செயலாளர் கார்த்திகேயன், ஆசிரியர் ஜேம்ஸ், பொறியாளர் மனோஜ்குமார் உள்பட கட்சியினர்கள் கலந்து கொண்டனர்.
       முன்னதாக, நினைவு மண்டபத்தில் நிறுவப்பட்டுள்ள சுதந்திர போராட்ட  தியாகி வே.இமானுவேல் சேகரனார் முழுவுருவ திருஉருவச்சிலைக்கு தி.மு.க. சார்பில் மாவட்ட கழகச் செயலாளரும், ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் கே.கே. கதிரவன், ராமநாதபுரம் பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் பவானி ராஜேந்திரன் உள்பட கட்சியினர்கள் மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
         பின்னர், அ.தி.மு.க. சார்பில் மாவட்ட கழகச் செயலாளர் எம்.ஏ. முனியசாமி தலைமையில், எம்.பி. தர்மர், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மலேசியா பாண்டியன், டாக்டர் எஸ்.முத்தையா, பரமக்குடி நகரச் செயலாளர் அப்துல்மாலிக், அம்மா பேரவை மாவட்டச் செயலாளரும், நகர்மன்ற உறுப்பினர் வடமலையான் , தொழிற்சங்கம் நாகராஜன் உள்பட கட்சியினர்கள் கலந்து கொண்டு மலர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
       ம.தி.மு.க. சார்பில் கே. ஏ. எம். குணா தலைமையில் பிரகாசம் உள்பட கட்சியினர்கள், தாய் தமிழர் கட்சி நிறுவனத் தலைவர் எஸ்.ஆர்.பாண்டியன் உள்பட கட்சியினர்கள் மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ஐந்தினை மக்கள் கட்சி சார்பில் மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
       தொடர்ந்து, சமுதாய மக்கள் பரமக்குடி தேவேந்திர பண்பாட்டுக் கழகம் சார்பில் தலைவர் சக்கரவர்த்தி, செயலாளர் ராமகிருஷ்ணன், பொருளாளர் செல்வராணி உள்பட கழகத்தினர்கள் மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பொன்னையாபுரம், வீரம்பல், விளங்களத்தூர், பரமக்குடி பகுதி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சமுதாய மக்கள் திரளாக வந்து மலர்மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினர்.