பண்ருட்டி அடுத்த பூங்குணம் ஏரிக்கரையில் சமூக தன்னார்வ அமைப்புகள் சார்பில் 1008 மரங்கள் மற்றும் 10,008 பனை விதைகள் நடும் தொடக்க விழா!

பண்ருட்டி அடுத்த பூங்குணம் ஏரிக்கரையில் சமூக தன்னார்வ அமைப்புகள்  சார்பில் 1008 மரங்கள் மற்றும் 10,008 பனை விதைகள் நடும் தொடக்க விழா!

பண்ருட்டி, அக்.14-கடலூர் மாவட்டம், பண்ருட்டி தாலுக்காவில்  
மரம் வளர்ப்போம்! மழை பெறுவோம்! சுற்றுச்சூழலைப் பாதுகாத்து, வளமான எதிர்காலத்தை உருவாக்குவோம்! என்ற உயரிய நோக்கில்,  கடலூர் மாவட்ட சுற்றுப்புற சூழல் மற்றும் நீர்நிலை பாதுகாப்பு இயக்கம், YES அமைப்பு பண்ருட்டி, பூங்குணம் ஊராட்சியைச் சார்ந்த பொதுமக்கள் சார்பில் 1008 மரங்கள் மற்றும் 10,008 பனை விதைகள் நடும் தொடக்க நிகழ்ச்சி 11.10.2026 அன்று பண்ருட்டி அடுத்த பூங்குணம் ஏரிக்கரையில் நடைபெற்றது. 

      இந்நிகழ்ச்சியில், வணிகர் சங்க மண்டலத்  தலைவர் D. சண்முகம்,  ஸ்ரீராம் பேட்டரி ராஜசேகர்,  வள்ளி விலாஸ் சரவணன்,  விழுப்புரம் மகாலட்சுமி  உரிமையாளர்,  பண்ருட்டி தொழிலதிபர் லட்சுமிரங்கன்,  அபிராமி லட்சுமி ரங்கன், ஸ்ரீராம் சோலார் உரிமையாளர் சிவக்குமார், தொழிலதிபர் மற்றும் சமூக ஆர்வலர் திரு மற்றும் YES அமைப்பை சார்ந்த நிர்வாகிகள் பூங்குணம்  ஊராட்சியை சார்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு  பூங்குணம் ஏரிக்கரையில் மரங்களை நட்டுவித்து தொடங்கி வைத்தார்கள். 
       மேலும், நிகழ்ச்சியில்  பேசிய சிறப்பு அழைப்பாளர்கள்,  சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் மரங்களின் முக்கியப் பங்கு குறித்தும்,  மரங்கள் நமக்குத் தேவையான ஆக்சிஜனை வழங்குவதோடு, மழைப்பொழிவை அதிகரித்து அளிக்கவும், வெப்பத்தைக் குறைக்கவும், காற்று மாசுபாட்டைத் தடுக்கவும் உதவுவதால் வருங்கால சந்ததியினருக்கு  மரம் நடுவதன் அவசியம் குறித்து விளக்கி  விழிப்புணர்வு வழங்கினார்கள்.