விழுப்புரத்தில் தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் 7-வது மாநில அளவிலான இளைஞர் தடகளப் போட்டிகள்...

விழுப்புரத்தில் தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் 7-வது மாநில அளவிலான இளைஞர் தடகளப் போட்டிகள்

விழுப்புரம், ஆக. 09-
விழுப்புரம் மாவட்ட விளையாட்டு மைதானத்தில்  தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் 7-வது மாநில அளவிலான இளைஞர் தடகளப் போட்டிகள் தொடங்கியது.
         போட்டிகளை முன்னாள் டி.ஜி.பி. ராஜேந்திரன் மற்றும் தமிழ்நாடு தடகள சங்க ஆலோசகர் லதா ஆகியோர் தொடங்கி வைத்தனர். விழுப்புரம் மாவட்ட தடகள சங்கத் தலைவர் பொன்னுசாமி கார்த்திக், செயலாளர் மணிவண்ணன், மாவட்ட விளையாட்டு அலுவலர் ஆழிவாசன் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
         தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் சுமார் 800 தடகள வீரர், வீராங்கனைகள் இப்போட்டிகளில் பங்கேற்றுள்ளனர். 18 மற்றும் 23 வயதுக்குட்பட்டோர் பிரிவுகளில் 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர் ஓட்டம், தடை ஓட்டம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு தடகளப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
        இரண்டு நாட்கள் நடைபெறும் இம்மாநில அளவிலான போட்டிகளில், ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களைப் பெறும் வீரர், வீராங்கனைகளுக்கு பரிசுக் கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.