மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை மூன்றாவதாக இடம்பெறச் செய்ததற்கு உலகத் திருக்குறள் கூட்டமைப்புத் தலைவர் முனைவர் மு. ஞானமூர்த்தி கண்டனம் !
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை மூன்றாவதாக இடம்பெறச் செய்ததற்கு உலகத் திருக்குறள் கூட்டமைப்புத் தலைவர் முனைவர் மு. ஞானமூர்த்தி கண்டனம்
சென்னை, ஜுலை 29-மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை மூன்றாவதாக இடம்பெறச் செய்ததற்கு உலகத் திருக்குறள் கூட்டமைப்புத் தலைவர் முனைவர் மு. ஞானமூர்த்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் கூறுகையில்,
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா நேற்று (28.07.2026) நடைபெற்றது.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கலந்து கொண்டார். மொத்தம் 37,877 மாணவர்கள் பட்டம் பெறுவதாகவும், அவர்களில் 871 பேருக்கு ஆளுநர் நேரடியாக பட்டங்களை வழங்குவார் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் பட்டமளிப்பு விழாவில் முதலில் “வந்தே மாதரம்” இசைக்கப்பட்டு, தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக இடம்பெற்றது.
தமிழ்மொழிக்கும், தமிழர் பண்பாட்டுக்கும் உரிய மரியாதையைப் பேண வேண்டிய கல்வி நிறுவன விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்துக்கு உரிய முன்னுரிமை வழங்கப்படாதது மிகுந்த வருத்தத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்துகிறது.
இதனை எதிர்த்து, தமிழ்த்தாய் வாழ்த்தை மூன்றாவதாக இடம்பெறச் செய்ததற்குக் கண்டனம் தெரிவித்து பட்டமளிப்பு விழாவைப் புறக்கணித்த தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் நிலைப்பாட்டைப் பாராட்டுகிறேன்.
அதேவேளையில், தமிழ்த்தாய் வாழ்த்தை மூன்றாவதாக இடம்பெற அனுமதித்த தமிழ்நாடு ஆளுநரையும், இதற்கு வழிவகுத்த ஒன்றிய அரசின் செயலையும் உலகத் திருக்குறள் கூட்டமைப்பின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
தமிழ்மொழி, தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தமிழர் பண்பாட்டு மரபுகளுக்கு உரிய மரியாதை அனைத்து அரசு மற்றும் கல்வி நிறுவன நிகழ்ச்சிகளிலும் தொடர்ந்து உறுதி செய்யப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன் என்று உலகத் திருக்குறள் கூட்டமைப்பு தலைவர்
மு. ஞானமூர்த்தி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.