வெப்பச் சலனம் மற்றும் தீவிர வெப்ப அலை (Heatwave) காரணமாக மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பள்ளிகளுக்கு விடுமுறை நீட்டிக்க வேண்டும் என்று இந்திய சட்ட உரிமைகள் நுகர் பாதுகாப்பு கழகத்தின் தலைவர் டாக்டர் புரட்சி வி.எஸ்.நாகமூர்த்தி வலியுறுத்தல்!

வெப்பச் சலனம் மற்றும் தீவிர வெப்ப அலை (Heatwave) காரணமாக  மாணவர்களின்  நலனைக் கருத்தில் கொண்டு  பள்ளிகளுக்கு விடுமுறை நீட்டிக்க வேண்டும் என்று இந்திய சட்ட உரிமைகள் நுகர் பாதுகாப்பு கழகத்தின் தலைவர் டாக்டர் புரட்சி வி.எஸ்.நாகமூர்த்தி வலியுறுத்தல் சென்னை, ஜுன் 05-வெப்பச் சலனம் மற்றும் தீவிர வெப்ப அலை (Heatwave) காரணமாக  மாணவர்களின் உடல் நலனைக் கருத்தில் கொண்டு தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில அரசுகள் பள்ளிகளுக்கு கோடை விடுமுறையை நீட்டிக்க வேண்டும் என்று இந்திய சட்ட உரிமைகள் நுகர் பாதுகாப்பு கழகத்தின் தலைவர் டாக்டர் புரட்சி வி.எஸ்.நாகமூர்த்தி வலியுறுத்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். 
    தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கடும் வெயில் காரணமாக கோடை விடுமுறையை நீட்டிக்கக் கோரி பெற்றோர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இருப்பினும், பள்ளிகள் திறக்கப்பட்டு புதிய கல்வியாண்டு நேற்று ஜூன் 4 முதல் தொடங்கி விட்டது.
      ஆனால், இந்த ஆண்டு புவி வெப்பமயமாதல் மற்றும் பருவநிலை மாற்றத்தின் காரணமாக பூமியின் வெப்பநிலை கணிசமாக தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது.  காற்றின் அழுத்த மாறுபாடுகளால் ஏற்படும் வெப்பச் சலனம் காரணமாக, கடுமையான வெயில் மற்றும் அனல் காற்று வீசுகிறது.       
         இத்தகைய தீவிர வானிலை மாற்றங்களால், பள்ளிக்குச் செல்லும் இளம் குழந்தைகளின் ஆரோக்கியம் பெரிதும் பாதிக்கப்படும் சூழல் உள்ளது. அதிக வெப்பம் காரணமாக குழந்தைகளுக்கு எளிதில் நீரிழப்பு (Dehydration), தலைசுற்றல், மற்றும் சோர்வு,  தீவிர நீர் இழப்பு  மற்றும் வெப்ப பக்கவாதம் போன்ற பாதிப்புகள் ஏற்படும் அபாயமும் உள்ளது. மேலும் மாணவர்களின் கவனத்தை சிதறடித்து, கற்றல் திறனையும் குறைக்க வாய்ப்புள்ளது.  மதிய நேரங்களில் பள்ளிகளில் வெப்ப அலையின் தாக்கம் அதிகமாக இருப்பதால்  மாணவர்கள் வெளியே செல்வது ஆபத்தாக மாறும் நிலை உள்ளது. 
         எனவே,  வெப்பச் சலனம் குறையும் வரை தீவிர வெப்பத்திலிருந்து  மாணவர்களின் நலனைக் காக்க கோடை விடுமுறை நீட்டிக்கப்படுவது அவசியம் ஆகும். 
           குழந்தைகளைக் காப்பது பெற்றோர்கள் மற்றும் அரசின் கூட்டுப் பொறுப்பாகும்.  புதுச்சேரி அரசு சார்பில் ஆட்சியர்களுடன் விடுமுறை நீட்டிப்பு குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டிலும் மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு கோடை விடுமுறையை நீட்டிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று இந்திய சட்ட உரிமைகள் நுகர்வோர் பாதுகாப்பு கழகத்தின் தலைவர் டாக்டர் புரட்சி வி.எஸ்.நாகமூர்த்தி வலியுறுத்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.