வந்தவாசியில், 'மக்களோடு மக்களாக போலீஸ் பேட்ரல்' (Community Policing) முறையின் கீழ் பாதுகாப்பு பணியில் துணை காவல் கண்காணிப்பாளர் சதீஷ்குமார்!

தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவுப்படி,  பொதுமக்கள் மற்றும் காவல்துறையினருக்கு இடையே உள்ள இடைவெளியைக் குறைக்க, 'மக்களோடு மக்களாக போலீஸ் பேட்ரல்' (Community Policing) முறை தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இன்று (06.06.2026) இரவு 9.00 மணியளவில் திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி   உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், காவல் துணை கண்காணிப்பாளர் சதீஷ்குமார் தலைமையில் காவல் உதவி ஆய்வாளர்கள் சங்கர், ரமேஷ் உள்ளிட்ட காவலர்கள் ரோந்து பணியின் போது  பொதுமக்களிடம் நேரடியாகப் பேசி, அவர்களின் குறைகளைத் தீர்க்கும் வகையில் காவல் துறை உங்கள் நண்பன் என்ற நோக்கத்தில் பணியை மேற்கொண்டிருந்தார்கள்‌.  பொதுமக்களை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ள தமிழக முதல்வருக்கு பல்வேறு தரப்பினரும் நன்றி தெரிவித்து வருகின்றனர்...