கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ஹேக்கத்தான் போட்டிக்கான இணையதள வெளியீட்டு விழா!

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் 
ஹேக்கத்தான் போட்டிக்கான இணையதள வெளியீட்டு விழா!

கோவை, ஜுன். 26 - கோவை நவஇந்தியா பகுதியில் செயல்பட்டு வரும் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியானது, சிங்கப்பூர் நிறுவனமான ஐ ஜீனியஸ் ஏஐ பிரைவேட் லிமிடெட் உடன் கடந்த மாதம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.
       அதன்படி, ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறவுள்ள ஹேக்கத்தான் 3.0 நிகழ்விற்கான இணையதள வெளியீட்டு விழா கல்லூரியின் கருத்தரங்க அறையில் நடைபெற்றது. ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியின் முதல்வர் - செயலர், முனைவர் பி.எல்.சிவக்குமார் விழாவிற்குத் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக, சிங்கப்பூர் ஐ ஜீனியஸ் ஏஐ பிரைவேட் லிமிடெட்டின் நிறுவனர் அண்ட் முதன்மை கட்டமைப்பாளர் காளிராஜன் பஞ்சலிங்கம் கலந்து கொண்டார்.     
          24 மணிநேர ஹேக்கத்தான் 3.0 போட்டிக்கான இணைய தளத்தை கல்லூரியின் முதல்வர் வெளியிட, சிறப்பு அழைப்பாளர் பெற்றுக் கொண்டார். இந்த 24 மணி நேர ஹேக்கத்தான் போட்டியில் பங்கேற்க எந்தவித கட்டணமும் இல்லை.  இந்திய முழுவதிலும் இருந்து அனைத்து இளநிலை, முதுநிலை மாணவர் - மாணவியர்களும் பங்கேற்கலாம். போட்டிகளில் பங்கேற்க விரும்புவோர் https://hackathon2026.in என்ற இணைய இணைப்பின் வழியாக ஜுலை 31 - ந் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.     
    பதிவு தொடர்பான சந்தேகங்களுக்கு 96299 24052 , 98429 4634, 87782 41551, 
93450 60349 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம். ஹேக்கத்தான் போட்டிகளானது ஆகஸ்ட் 14 , 15 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது என கல்லூரியின் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.
         பின்னர் சிறப்பு அழைப்பாளர் பேசும் போது, ஹேக்கத்தான் போட்டிகளின் முக்கியத்துவம் பற்றியும், அதனால் மாணவர் - மாணவியர்கள் அடையும் நன்மைகள் குறித்தும் விரிவாகப் பேசினார்.
        தொழில், புதுமை , உட்கட்டமைப்பு, தரமான கல்வி, ஆரோக்கியம் உள்ளிட்ட 17 எஸ்.டி.ஜி குறிக்கோள்களை  அடிப்படையாகக் கொண்டு மாணவர் - மாணவியர்கள் தங்களின் தொழில்நுட்பம் , படைப்பாற்றல் திறன்களை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பை இந்த ஹேக்கத்தான் போட்டி வழங்கவுள்ளது.
இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று முதல் பரிசு பெறும் அணிக்கு ரூ. 1,00,000, இரண்டாம் பரிசு பெறும் அணிக்கு ரூ.50,000 , மூன்றாம் பரிசு பெறும் அணிக்கு ரூ.25,000 ரொக்கம் வழங்கப்படவுள்ளன. 
          இதில், தேர்வு செய்யப்படும் முதல் மூன்று அணிகளை ஊக்குவிக்கும் வகையில், டிசம்பர் மாதம் சிங்கப்பூரில் நடைபெறும் அறிவியல் , புதுமை போட்டியில் பங்கேற்க வாய்ப்பு அளிக்கப்படும். அதற்கான அனைத்து செலவினங்களையும் ஐ ஜீனியஸ் ஏஐ நிறுவனம் இலவசமாக வழங்க உள்ளது.
         மேலும், சிறந்த திறமையாளர்களுக்கு வாய்ப்பு வழங்கும் நோக்கில், ஐ ஜீனியஸ் நிறுவனம் இலவச மைக்ரோசாஃப்ட் இன்டர்ன்ஷிப் வாய்ப்புகளையும், நேரடி தொழில்துறை திட்டங்களில் பணியாற்றும் வாய்ப்பையும் வழங்க உள்ளது.
       முன்னதாக, தகவல் தொழில்நுட்பத் துறைத்தலைவர் முனைவர் என்.சுமதி வரவேற்றார்.  கணினி அறிவியல் , தரவு பகுப்பாய்வுத் துறைப் பேராசிரியர் மோ. பிரனீஷ் நன்றி கூறினார்.