மக்கா நகரில் கீழை சவூதி அமைப்பு மேற்கு மண்டலம் ஜித்தா சார்பாக கீழக்கரை ஹாஜிகளுக்கு விருந்தோம்பல் சந்திப்பு நிகழ்ச்சி!
மக்கா நகரில் கீழை சவூதி அமைப்பு மேற்கு மண்டலம் ஜித்தா சார்பாக கீழக்கரை ஹாஜிகளுக்கு விருந்தோம்பல் சந்திப்பு நிகழ்ச்சி!
மக்கா, ஜுன் 05-கீழை சவூதி அமைப்பு மேற்கு மண்டலம் ஜித்தா சார்பாக கீழக்கரை ஹாஜிகளுக்கு விருந்தோம்பல் சந்திப்பு நிகழ்ச்சி மக்கா நகரில் நடைபெற்றது.
இதில் கீழக்கரையில் இருந்து வருகை தந்த நூற்றுக்கும் அதிகமான ஹாஜிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை கீழை சவூதி அமைப்பு சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தது. கீழை சவூதி அமைப்பு ஆண்டு தோறும் நடத்தும் கீழக்கரை ஹாஜிகள் சந்திப்பு நிகழ்ச்சி அமைப்பின் கௌரவ தலைவர் முகைதீன் சீனி அலி (மு.அ) தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
சிறுவன் ஃபராஸ் கிரா-அத்துடன் துவங்கி உறுப்பினர் பஸாஹத் மற்றும் கீழை இர்ஃபான் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். நிகழ்ச்சியை அப்துல் ஹமீது (ஹாஜி) முகம்மது சஹீல் மற்றும் நிர்வாகிகள் சேர்ந்து சிறப்பாக அமைத்திருந்தனர்.
விழா நிறைவில், ஹாஜிகளுக்கு விருந்து மற்றும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்கள்.