நாட்டின் பல்வேறு மாநிலங்களில் வளர்க்க தடை செய்யப்பட்ட கோனோகார்பஸ் (Conocarpus) மரங்களை தமிழ்நாட்டிலும் தடை விதிக்கக் கோரி அகில இந்திய சட்ட உரிமைகள் நுகர்வோர் பாதுகாப்புக் கழகம் தமிழக முதல்வருக்கு கோரிக்கை!

நாட்டின் பல்வேறு மாநிலங்களில்  வளர்க்க தடை செய்யப்பட்ட கோனோகார்பஸ் (Conocarpus) மரங்களை  தமிழ்நாட்டிலும் தடை விதிக்கக் கோரி அகில இந்திய சட்ட உரிமைகள் நுகர்வோர் பாதுகாப்புக் கழகம் முதல்வருக்கு கோரிக்கை 
   சென்னை, மே 14-கோனோகார்பஸ் (Conocarpus) மரம் சுற்றுச்சூழல், மனித ஆரோக்கியம் மற்றும் உள்கட்டமைப்பிற்கு தீங்கு என்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் குஜராத் போன்ற இந்திய மாநிலங்களில் இம்மரம் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி தமிழகத்திலும் இதை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக முதல்வர் விஜய்க்கு அகில இந்திய சட்ட உரிமைகள் நுகர்வோர் பாதுகாப்புக் கழகத்தின் தலைவர் புரட்சி டாக்டர் வி.எஸ்.நாகமூர்த்தி கோரிக்கை விடுத்துள்ளார்.     
      மேலும் கூறுகையில்,  அன்பான தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு,  வெளிநாட்டில் இருந்து எடுத்து வரப்பட்டு இந்தியாவில் தடை செய்யப்பட்ட மரத்தை தமிழ்நாட்டில் கோனாகார்பஸ் என்ற மரம் தெருவெங்கும் மக்கள் நடமாடும் பார்க்குகள்,  ஹைவே ரோடு ஓரங்களில் நடப்பட்டு நாட்டை சீரழிக்கும் திட்டம் கடந்த ஆட்சியில் நடந்திருக்கிறது. 
      இவ்வகை, மரம் வேகமாக வளரக்கூடியது  மற்றும் பசுமையாக இருக்கக்கூடியது என்றாலும், இது மனித ஆரோக்கியத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் பல எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துகிறது. இதனால்தான் பல இடங்களில், குறிப்பாக குஜராத் போன்ற மாநிலங்களில், இந்த மரங்களை வளர்க்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கோனோகார்பஸ்  மரத்தின் பூக்களிலிருந்து வெளியாகும் மகரந்தத் தூள் (Pollen) காற்றில் பரவி, கடுமையான சளி, இருமல், ஆஸ்துமா மற்றும் மூச்சுத் திணறல் போன்ற சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்துகிறது. மேலும் மரத்தின் அருகில் நீண்ட நேரம் இருக்கும்போது, தோல் அலர்ஜி (Skin Allergy) மற்றும் ஒவ்வாமை பிரச்சனைகள் ஏற்படலாம். இதன் மகரந்தத் தூள்கள் சுவாசத்தின் மூலம் உடலுக்குள் சென்று, புற்றுநோய் உண்டாகும் அபாயத்தை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
     கோனோகார்பஸ் மரம் நிலத்தடி நீரை அதிக அளவில் உறிஞ்சும். இது நிலத்தடி நீர் மட்டத்தைக் குறைத்து, அப்பகுதியில் நீர் பற்றாக்குறையை ஏற்படுத்தும். மற்றும் மண்ணின் உப்புத்தன்மையை (Soil salinity) அதிகரிக்கிறது, இதனால் உள்ளூர் தாவரங்கள் மற்றும் பயிர்கள் வளருவது கடினமாகிறது.  இது வேகமாக வளர்ந்து, அந்தப் பகுதியில் உள்ள இயற்கையான, பூர்வீக மரங்கள் மற்றும் செடிகளை வளர விடாமல் அழித்துவிடும். இது பூர்வீக மரங்கள் போல பறவைகள் கூடு கட்டவோ, தேனீக்கள் மகரந்தச் சேர்க்கை செய்யவோ உதவுவதில்லை. இதனால் உள்ளூர் பறவைகள் மற்றும் பூச்சிகளின் வாழ்விடங்கள் அழிகின்றன.
     இந்த மரத்தின் வேர்கள் மிக ஆழமாகவும், அகலமாகவும் பரவக்கூடியவை. இதனால் வீடுகள், சாலைகள், பாதாள சாக்கடைகள் மற்றும் நிலத்தடி குழாய்கள் சேதமடையக்கூடும்.எனவே, இந்த மரங்களை வளர்ப்பதைத் தவிர்த்து, பூர்வீக மரம் மற்றும் செடி வகைகளை நட்டு வளர்ப்பது சிறந்தது.
    எனவே,  இதில் ஊழல் செய்தவர்களை கண்டெடுத்து உடனடியாக அவர்கள் கைது செய்யப்பட வேண்டும்.  இதை யார் மூலமாக டெண்டர் விடப்பட்டதோ அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அவர்கள் சொத்தை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  தமிழக முதல்வருக்கு புரட்சி டாக்டர் வி.எஸ். நாகமூர்த்தி கோரிக்கை விடுத்துள்ளார்.