தமிழக முதல்வராகப் பதவியேற்கும் தவெக தலைவர் விஜய்க்கு அகில இந்திய சட்ட உரிமைகள் நுகர்வோர் பாதுகாப்பு கழகத் தலைவர் டாக்டர் புரட்சி வி.எஸ். நாகமூர்த்தி வாழ்த்து!
தமிழக முதல்வராகப் பதவியேற்கும் தவெக தலைவர் விஜய்க்கு அகில இந்திய சட்ட உரிமைகள் நுகர்வோர் பாதுகாப்பு கழகத் தலைவர் டாக்டர் புரட்சி வி.எஸ். நாகமூர்த்தி வாழ்த்து!
சென்னை, மே 10-தமிழக முதல்வராகப் பதவியேற்கும் தவெக தலைவர் விஜய்க்கு அகில இந்திய சட்ட உரிமைகள் நுகர்வோர் பாதுகாப்பு கழகத் தலைவர் டாக்டர் புரட்சி வி.எஸ். நாகமூர்த்தி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது அறிக்கையில் மேலும் கூறுகையில், திரைத்துறையில் சாதனை படைத்தவர், இனி அரசியல் களத்தில் தமிழக மக்களின் நலனுக்காகவும், மாநிலத்தின் வளர்ச்சிக்காகவும் சிறப்பாகச் செயல்பட்டு, புதிய மாற்றத்தை உருவாக்குவார் என்று நம்புகிறேன். உங்கள் தலைமையில் தமிழகம் முன்னேற்றப் பாதையில் செல்லட்டும். தமிழக அரசியலில் ஒரு புதிய மற்றும் நம்பிக்கையான அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளதற்கு வாழ்த்துக்கள்.
மக்களின் அன்பைப் பெற்ற நீங்கள், இனி மக்களின் முதல்வராகச் சிறந்த சேவை செய்து அனைவரின் மனதிலும் இடம் பிடிக்க வேண்டும்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, போதைப் பொருட்கள் இல்லா மாநிலம் என பல்வேறு சீர்திருத்தங்களை உடனடியாக மேற்கொண்டு அமைதி மற்றும் செழிப்பை கொண்டு வர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது என அகில இந்திய சட்ட உரிமைகள் நுகர்வோர் பாதுகாப்பு கழகத் தலைவர் டாக்டர் புரட்சி வி.எஸ். நாகமூர்த்தி, தெரிவித்தார். மேலும், இன்று (10.05.2026) தமிழக முதல்வராக பதவி ஏற்கும் விஜய்க்கு அமைப்பின் சார்பில் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.