2026-தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகள் குறித்து முஸ்லிம் மக்கள் கழகத்தின் நிறுவனத் தலைவர் சமூக போராளி முனைவர் ச.சு.ஜைனுதீன் கருத்து!
2026-தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகள் குறித்து முஸ்லிம் மக்கள் கழகத்தின் நிறுவனத் தலைவர் சமூக போராளி முனைவர் ச.சு.ஜைனுதீன் கருத்து!
விழுப்புரம், மே 05-
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் தளபதி விஜய் அவர்களே, உங்களுக்கு முஸ்லிம் மக்கள் கழகத்தின் சார்பில் வாழ்த்துக்கள்.
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும் என்பதே முஸ்லிம் மக்கள் கழகத்தின் கருத்து.
என்ன ஒரு விசித்திரமான தேர்தல். முன்னாள் தமிழக முதல்வர் ஸ்டாலின் இரண்டாம் இடத்திற்கு வந்தும், அவரால் எதிர்க்கட்சித் தலைவராக இருக்க முடியவில்லை. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தலில் வென்றும், அவரால் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தக்கவைக்க முடியவில்லை.
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் முதலிடம் பிடித்தும், அவரால் முதலமைச்சர் நாற்காலியில் அமர முடியவில்லை. தமிழகத்தில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களை மிஞ்சும் அளவிற்கு அதிக அளவில் இடங்களை தக்க வைத்து ஆட்சி அதிகாரத்தில் வர முடியாத சூழல் உள்ளது. தமிழகத்தில் 108 இடங்களை வென்ற த.வெ.க விஜயை பொறுத்தவரையிலும் கூட்டணி ஆட்சி அமைத்தால்தான் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருக்க முடியும் என்பதனை முஸ்லிம் மக்கள் கழகத்தின் வெளிப்பாடான நிலையை காட்டியுள்ளது.