பனையபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நூற்றாண்டு விழா...

*பனையபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி நூற்றாண்டு விழா* 

 விக்கிரவாண்டி, ஏப்ரல் 04 -
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம்,பனையபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நூற்றாண்டு விழா கிராம நாட்டாமைகள் சாம்பசிவம், அன்புமணி, செல்வநாதன், ரங்கநாதன், தலைமையில் 
ஊராட்சி மன்ற தலைவர் காந்த ரூபி வீரமுத்து, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கலா முருகன் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது.
      மேலும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் தமிழ்ச்செல்வி தர்மன், பிரகாஷ், குமுதாபாபு, அஸ்வினி முருகன், காசிராஜா, 
பாக்கியமேரி லூர்துசாமி, வெங்கடேசன், வெங்கடவரதன், பார்த்திபன்,கலந்து கொண்டனர்.
SMC தலைவர் மஞ்சுளா சுரேஷ், கல்வியாளர் கிருஷ்ணமூர்த்தி விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
      பள்ளி நூற்றாண்டு தினத்தை முன்னிட்டு நினைவு வளைவை விக்கிரவாண்டி வட்டார கல்வி அலுவலர் சேகர், வட்டார கல்வி அலுவலர் புஷ்பராணி திருவள்ளுவர், APJ அப்துல் கலாம் உருவ சிலையை திறந்து வைத்து மாணவ, மாணவியர்களுக்கு சிறப்புரையாற்றினார்.
இன் நூற்றாண்டு விழாவில் பள்ளியில் முன்னாள் ஆசிரியர்களுக்கும், முன்னாள் பள்ளி மாணவர்களுக்கும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.
         அதன் பின்னர் பள்ளியில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் பேச்சு போட்டிகள், பரதநாட்டியம்,நாடகம், மக்களை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றது.
    போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
இப்பள்ளியில் நூற்றாண்டு விழாவிற்காக தலைமை ஆசிரியர் உமா அனைவரையும் அன்புடன் வரவேற்றனர்.
      இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர்களாக
பள்ளி ஆசிரியர்கள் செல்வி, சந்திரலேகா, சசிகலா, தரணி, சிறப்பாக செயல்பட்டனர் அதன் பின்னர் தெய்வசிகாமணி  நன்றியுரை ஆற்றினார்.