வயதுக் குழந்தை கடத்தல்: கடலூர் காவல்துறையின் துரித நடவடிக்கையால் குழந்தை மீட்கப்பட்டு குற்றவாளி கைது!

2 வயதுக் குழந்தை கடத்தல்:  கடலூர் காவல்துறையின் துரித நடவடிக்கையால் குழந்தை மீட்கப்பட்டு குற்றவாளி கைது!
கடலூர், ஏப்.28-
கடலூர் மாவட்டம், நடுவீரப்பட்டு காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பத்திரக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த பிரவீன் என்பவரின் 2 வயது மகள் வீட்டின் வெளியே விளையாடி கொண்டிருந்தபோது மர்ம நபரால் கடத்தப்பட்டதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.    தகவலறிந்த கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  S. ஜெயக்குமார், குழந்தையை உடனடியாகக் கண்டுபிடிக்க காவல்துறையினருக்கு உத்தரவு பிறப்பித்தார். மேலும், அதிவிரைவுப் படை வீரர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளை துரிதப்படுத்தினார்.
    நடுவீரப்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள அனைத்து முக்கிய சாலைகளிலும் காவல்துறையினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். மேலும்,  துணை காவல் கண்காணிப்பாளர் ராஜா, காவல் ஆய்வாளர்  வேலுமணி, உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் தலைமையிலான தனிப்படையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணையை தொடங்கினர்.     
    கடத்தப்பட்ட குழந்தையைக் கண்டுபிடிக்க தனிப்படையினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில், புலியூர் கிராமத்தை சேர்ந்த அன்பு, வயது 22, தந்தை பெயர் விஸ்வநாதன் என்பவர், தனது வயலின் அருகே குழந்தை அழும் சத்தம் கேட்டு அங்குச் சென்று தனியாக அழுதுகொண்டிருந்த குழந்தைக்கு தைரியம் கூறி, அவரைப் பத்திரமாக மீட்டு, குள்ளஞ்சாவடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். காவல்துறையினர் குழந்தையை மீட்டு, மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தினர். குழந்தை நலமுடன் இருப்பது உறுதி செய்யப்பட்டு, பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டது.    
    மேலும் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடலூர் மாவட்ட காவல்துறையினரின் உடனடி மற்றும் துரித நடவடிக்கையால், கடத்தப்பட்ட 2 வயது குழந்தை சில மணி நேரங்களில் பத்திரமாக மீட்கப்பட்டு குற்றவாளி கைது கைது செய்யப்பட்டது பொதுமக்களிடையே பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.

குழந்தையை மீட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்த இளைஞர் அன்பு அவர்களை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  S.ஜெயக்குமார்,  வெகுவாகப் பாராட்டினார்.