தேனி மாவட்ட தொண்டு நிறுவனங்களின் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு ஆலோசனைக் கூட்டம்
தேனி, ஏப். 03-
தேனி மாவட்ட தொண்டு நிறுவனங்களின் சார்பில் என் வாக்கு விற்பனைக்கு அல்ல தேர்தல் விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் தேனி தனியார் ஹோட்டலில் வைகை அணை ஸ்டுடென்ட்ஸ் வெல்ஃபேர் சாந்தகுமார் தலைமையில் நடைபெற்றது.
தேனி அகமகிழ் தொண்டு நிறுவன இயக்குனர் ராஜ்குமார் முன்னிலை வகித்தார். முன்னதாக பெரியகுளம் நேசம் தொண்டு நிறுவன நிர்வாக இயக்குனர் நேசம் முருகன் வரவேற்று பேசினார். 18 வயதுக்கு மேற்பட்ட வாக்குரிமை பெற்ற அனைத்து வாக்காளர்களும் தவறாமல் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும். நமது உரிமையை நிலைநாட்ட ஒவ்வொரு வாக்காளரும் வாக்களித்து கடமை உணர்வு ஆற்ற வேண்டும். ஓட்டுக்கு பணம் வாங்க மாட்டோம் உரிமையை விட்டுக் கொடுக்க மாட்டோம் வாக்கு விற்பனைக்கு அல்ல என்ற வாசகம் அடங்கிய துண்டு பிரசுரங்களை வாக்காளர்களுக்கு மற்றும் பொதுமக்களுக்கு வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் 30க்கும் மேற்பட்ட தேனி மாவட்ட தொண்டு நிறுவனங்களை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியின் முடிவில் ஸ்வீட் டிரஸ்ட் நிர்வாக இயக்குனர் நாகராஜன் நன்றி கூறினார்.