நெமிலியில் தி.மு.க.வினர் தொகுதி மறுசீரமைப்பு மசோதாவின் நகலை எரித்து போராட்டம்!

நெமிலியில் தி.மு.க.வினர் தொகுதி மறுசீரமைப்பு மசோதாவின் நகலை எரித்து போராட்டம்!


ராணிப்பேட்டை, ஏப். 17-
மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் வீடுகள் மற்றும் பொது இடங்களில் கருப்பு கொடி ஏற்றி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அரசின் தொகுதி மறுசீரமைப்பு மசோதாவின் நகலை எரித்து, கண்டன முழக்கங்கள் எழுப்பி போராட்டம் நடத்தினார்.
         நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தில் தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்கிறது. இந்த மசோதா நிறைவேறினால் தென்னிந்திய மாநிலங்களின் மக்களவை எம்.பி.க்களின் விகிதம் கடுமையாக குறையும், வட மாநிலங்களின் விகிதம் அதிகரிக்கும் என்பது குற்றச்சாட்டு. இதனால் தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இந்த மசோதாவுக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளன.  
            நெமிலி பேருந்து நிலையத்தில் நெமிலி கிழக்கு ஒன்றிய செயலாளர் வடிவேலு தலைமையில் திமுகவினர் கருப்பு கொடி ஏந்தி, ஒன்றிய அரசின் தொகுதி மறுசீரமைப்பு மசோதாவின் நகலை எரித்து, ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பி போராட்டம் நடத்தினர்.
     இதில் நெமிலி பேரூர் செயலாளர் ஜனார்த்தனன், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் சரவணன், ஒன்றிய துணை செயலாளர் முகம்மது அப்துல் ரகுமான், நிர்வாகிகள் சேகர், சுகுமார், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.