முதுகுளத்தூர் தொகுதி இளங்காக்கூர் பரையன்குளம் நெடுங்குளம் ஆகிய கிராமங்களில் ஓட்டு கேட்டு சென்ற அமைச்சர் ராஜகண்ணப்பன் விரட்டியடிப்பு!
முதுகுளத்தூர் தொகுதி இளங்காக்கூர் பரையன்குளம் நெடுங்குளம் ஆகிய கிராமங்களில் ஓட்டு கேட்டு சென்ற அமைச்சர் ராஜகண்ணப்பன் விரட்டியடிப்பு
முதுகுளத்தூர், ஏப்.12-இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் சட்டசபை தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் ராஜகண்ணப்பனை கண்டித்து 5 ஆண்டுகளாக குடிநீரின்றி தவிக்கும் கிராம பொதுமக்கள், எங்கள் கிராமம் நினைவுக்கு வராமல் இப்போது வந்தது ஏன் எனக் கூறி பெண்கள் அமைச்சர் ராஜகண்ணப்பனை கேள்வி கேட்டு திணறடித்தனர். மீண்டும் திமுக ஆட்சி அமைந்தவுடன் செய்து தருவதாக கூறியும் பெண்களின் எதிர்ப்பால் இளங்காக்கூர் கிராமத்தில் ஓட்டு கேட்காமலேயே வெளியேறினார். அதே போல நெடுங்குளம், பரையன்குளம் ஆகிய கிராமங்களில் பொது மக்களின் எதிர்ப்பால் அதிர்ச்சியடைந்த அமைச்சர் கண்ணப்பன் ஏமாற்றத்துடன் திரும்பினார். அடிப்படை வசிதியான குடிநீர் தேவையைக் கூட செய்து கொடுக்கவில்லை எனக் கூறி பரையன்குளம் திமுகவினரே எதிர்த்ததால் அமைச்சர் எதுவும் பேசாமலே கடந்து சென்றுள்ளார்.
மேலும் பேரையூர், செங்கோட்டை பட்டி, புல்வாய்க்குளம் பாக்கு வெட்டி கருங்குளம் உள்பட 40க்கும் மேற்பட்ட கிராமங்களில் சென்று தொடர்ந்து வாக்குகள் சேகரித்தார்.