தென்காசி கொடிக்குறிச்சி ஸ்ரீராம் நல்லமணி யாதவா கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

தென்காசி கொடிக்குறிச்சி ஸ்ரீராம் நல்லமணி யாதவா கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

    தென்காசி, ஏப். 01- தென்காசி மாவட்டம் கொடிக்குறிச்சி ஸ்ரீராம் நல்லமணி யாதவா கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்தில் நேற்று (31.03.2026) நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்-2026 ஐ முன்னிட்டு 5 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு செல்லும் வழித்தடங்கள் மற்றும் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்வது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல்கிஷோர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அ.மயில்வாகனன்  முன்னிலையில் கள ஆய்வு மேற்கொண்டார்.
        இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 ஐ முன்னிட்டு 219 சங்கரன்கோவில் (தனி), 220-வாசுதேவநல்லூர் (தனி), 221- கடையநல்லூர், 222- தென்காசி, 223 ஆலங்குளம் ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் 23.04.2026 அன்று நடைபெற்று முடிந்தவுடன் பாதுகாப்பாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு செல்லும் வழித்தடங்கள், அந்தந்த சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடம், தபால் ஓட்டு வைப்பறை, மாவட்ட கட்டுப்பாட்டு மையம் (Strong Room) மற்றும் பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகளின் பணிகள் மேற்கொள்வது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் அலுவலர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார். 
        இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் சீ.ஜெயச்சந்திரன், தேர்தல் ராமச்சந்திரன், நடத்தும் அலுவலர்கள் வைஷ்ணவிபால், ராஜேந்திரன், பால்துரை, அனிதா, செயற்பொறியாளர் (பொதுப்பணித்துறை, கட்டடம்) அனிட்டா சாந்தி, உதவி இயக்குநர் (நில அளவை) ஜாஹிர் உசேன் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.