சட்டமன்றத் தேர்தல்-2026 முன்னிட்டு தவெக தலைவர் விஜய்க்கு முஸ்லிம் மக்கள் கழகத்தின் சார்பில் பாராட்டி வாழ்த்துக்கள்!

சட்டமன்றத் தேர்தல்-2026  முன்னிட்டு தவெக  தலைவர்  விஜய்க்கு முஸ்லிம் மக்கள் கழகத்தின் சார்பில்  பாராட்டி வாழ்த்து 
      சென்னை, ஏப்.03-
தமிழகத்தில் நடைபெறவுள்ள 2026 சட்டசபை பொதுத் தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றி கழகத்தின் நிறுவனத் தலைவர் விஜய் அவர்களுக்கு முஸ்லிம் மக்கள் கழகம் பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்துள்ளது.
     இது தொடர்பாக விழுப்புரம் மாவட்ட முஸ்லிம் மக்கள் கழகத்தின் நிறுவனத் தலைவர் முனைவர் ச.சு. ஜைனுதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை திராவிட கட்சிகளாக இருந்தாலும், அல்லது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் போன்ற கட்சிகளாக இருந்தாலும், இஸ்லாமியர்களுக்கு உரிய முக்கியத்துவம் வழங்கும் எண்ணம் குறைவாகவே இருந்தது. ஆனால் தம்பி தளபதி விஜய் அவர்கள் பெரிய மனதுடன் செயல்பட்டு வருகிறார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
     மேலும், தமிழக வெற்றி கழகம் 234 வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில், அதில் 13 இஸ்லாமியர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் தொகுதியில் இ.கே. சாகுல் ஹமீது, கடையநல்லூரில் ஆர்.கே. அப்துல் ஜலீல், புதுக்கோட்டையில் கே.எம். ஷெரீப், அறந்தாங்கியில் ஜே. முகமது பர்வேஷ், மதுரை மத்திய தொகுதியில் வி.எம்.எஸ். முஸ்தபா, பாபநாசத்தில் யூ. அசாருதீன், மயிலாடுதுறையில் எஸ்.எஸ். ஹாரூன் ரஷீத், திண்டுக்கலில் ஜி. நஜீர் ராஜா, உதகமண்டலத்தில் ஆர். இப்ராஹிம், ராணிப்பேட்டையில் தாஹிரா, வாணியம்பாடியில் சையத் புர்ஹானுத்தீன், ஆம்பூரில் பி. இம்தியாஸ், கிள்ளியூரில் எஸ். சபீம் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
         இவ்வாறு பல்வேறு தொகுதிகளில் இஸ்லாமிய வேட்பாளர்களை அறிமுகப்படுத்தியதற்காக, முஸ்லிம் மக்கள் கழகம் தளபதி விஜய் அவர்களுக்கு பாராட்டு தெரிவித்ததுடன், வரவிருக்கும் தேர்தலில் வெற்றி பெறவும் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துள்ளது.