தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்-2026 முன்னிட்டு திருவண்ணாமலையில் விளையாட்டு மேம்பாடு ஆணையத்தின் சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு....
திருவண்ணாமலையில் விளையாட்டு மேம்பாடு ஆணையத்தின் சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி
திருவண்ணாமலை, ஏப். 04-
திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்ப்பகராஜ், தலைமையில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 நடைபெறவுள்ளதை முன்னிட்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாடு ஆணையத்தின் சார்பில் வாக்காளர்கள் தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு விளையாட்டு போட்டி நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாடு ஆணையத்தின் சார்பில் மாவட்ட விளையாட்டு விடுதி பெண்களும், பீனிக்ஸ் ரோலர் போர்ஸ் அகாடமியை சேர்ந்தவர்களும் மற்றும் வீகன் மார்ஷியல் ஆர்ட்ஸ் அகாடமி சேர்ந்தவர்கள் போன்ற பல்வேறு விளையாட்டு மாணவ, மாணவிகள் சிலம்பம், கராத்தே மற்றும் வில் வித்தை போன்ற விளையாட்டுகளை விளையாடி வாக்காளர்களுக்கு தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் தர்ப்பகராஜ் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் விளையாட்டு மாணவ, மாணவிகள் என் வாக்கு, என் உரிமை, உங்கள் வாக்கு உங்கள் எதிர்காலம், 100 சதவீதம் வாக்களிப்போம்,
நேர்மையாக வாக்களிப்போம் என்ற விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்நிகழ்வில் திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) தனபதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) கிருஷ்ணன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் சண்முகாப்பிரியா, மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.