தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி சேலம், காடையாம்பட்டி அரசு விதைப்பண்ணையில் பல்வேறு தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி சேலம், காடையாம்பட்டி அரசு விதைப்பண்ணையில் பல்வேறு தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!     

 சேலம், ஏப்.17- 
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அரசு விதைப்பண்ணையில் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி பல்வேறு தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் அ.அருண் தம்புராஜ்,    நேற்று (17.04.2026) தொடங்கி வைத்தார்.     
    இதுகுறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர்  தெரிவித்ததாவது:
இந்திய தேர்தல் ஆணையத்தால் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-க்கான அறிவிப்பு 15.03.2026 அன்று வெளியிடப்பட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. மேலும் வாக்குப்பதிவு 23.04.2026 அன்று நடைபெறவுள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, சேலம் மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்களிப்பதை உறுதிசெய்யும் வகையில் முதல் முறை வாக்காளர்கள், இளம் வாக்காளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு வாக்காளர்களிடமும் வாக்களிப்பதன் அவசியம் குறித்து கையெழுத்து இயக்கம், செல்பி பாய்ண்ட், வாகன பேரணி, நடை பேரணி உள்ளிட்ட தொடர் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
        அதன் தொடர்ச்சியாக, இன்றையதினம், 100 சதவீத வாக்குப்பதிவினை உறுதி செய்யும் வகையிலும், வாக்காளர்கள் அனைவரும் தவறாமல் வாக்களிப்பது குறித்தும், வாக்காளர்களிடையே வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அரசு விதைப்பண்ணையில் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி தொடங்கி வைக்கப்பட்டது.
மேலும், வேளாண்மைத்துறையின் சார்பில் 100 சதவீத வாக்குப்பதிவினை உறுதி செய்யும் வகையிலும், நாவல் கன்று கொண்டு VOTE-100% என்ற வடிவிலும், நெல் மற்றும் உளுந்து தானியங்களை கொண்டு “23.04.2026 வாக்களிப்போம் 100%” என்ற வடிவில் அலங்கரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து, தமிழ்நாட்டின் பாரம்பரியமிக்க கிராமிய கலை நடனங்கள் மூலம் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இவ்வாறு மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர்                                        மருத்துவர் அ.அருண் தம்புராஜ்  தெரிவித்தார். 
       முன்னதாக, மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் அ.அருண் தம்புராஜ்,   தலைமையில் வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது.
          இந்நிகழ்வில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்  வாணி ஈஸ்வரி,  வேளாண்மை இணை இயக்குநர்  கு.சீனிவாசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கமலம், துணை இயக்குநர்கள்   சுஜாதா (வேளாண் வணிகம்),  கண்ணன்,   நீலாம்பாள்,  அருணா,  நாகராஜன் மற்றும் உதவி இயக்குநர்கள் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.