சேலம் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில் துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு!
சேலம் மாவட்டம், ஏற்காடு, அண்ணா புங்காவில் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலை
2026-ஐ முன்னிட்டு, பொதுமக்களிடம் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் அ.அருண் தம்புராஜ் (11.04.2026) அன்று துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இந்நிகழ்வில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வாணி ஈஸ்வரி உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்.