தேசிய அளவிலான மல்யுத்தப் போட்டிக்கு 10-ம் வகுப்பு குமரி மாணவன் தேர்வு!

தேசிய அளவிலான மல்யுத்தப் போட்டிக்கு 10-ம் வகுப்பு குமரி மாணவன் தேர்வு!
கன்னியாகுமரி, ஏப். 25-
கன்னியாகுமரி மாவட்டம் மேலப்பெருவிளையைச் சேர்ந்த சகாய ராஜன் - ராதிகா தம்பதியரின்  மகன் S.சஞ்ஜெய். இவர் ஆசாரிப்பள்ளம் பெல்ஃபீல்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.
சிறுவயதிலிருந்தே விளையாட்டில் ஆர்வம் கொண்ட இவர் மேலப்பெருவிளை மூவேந்தர் பயிற்சிப் பள்ளியில் மல்யுத்த பயிற்சி பெற்று வருகிறார். 
     கடந்த 5-ஆண்டுகளாக மாவட்ட , மாநில அளவிலான மல்யுத்த  போட்டிகளில் பங்கேற்று பல வெற்றிகளைப் பெற்றுள்ளார். மேலும் சிலம்பம், மாரத்தான் ஓட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டு திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.
தற்போது  17 வயதுக்குட்பட்டோர் தேசிய அளவிலான மல்யுத்தப் போட்டிக்குத் தேர்ச்சி பெற்று வருகிற 27-ஆம் தேதி மகாராஷ்டிராவில் நடைபெற உள்ள தேசிய போட்டியில் பங்கேற்க உள்ளார். விளையாட்டுத் துறையுடன் அறிவியல் துறையிலும் திறமை வெளிப்படுத்திய சஞ்ஜெய் குமரி அறிவியல் பேரவை நடத்திய 2023-2024-ஆம் ஆண்டுக்கான இளம் விஞ்ஞானி விருதையும் பெற்றுள்ளார்.
       சஞ்ஜெயின் இந்த சாதனைக்கு மூவேந்தர் பயிற்சிப் பள்ளி மாஸ்டர், கோச், வீரர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.